தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்தி நகரை சேர்ந்தவர் வெள்ளத்துரை (50). இவர் கோவில்பட்டி ராமசாமி தாஸ் பூங்கா நுழைவு வாயிலில் மீன் கடை மற்றும் கோழி இறைச்சிக்கடை நடத்தி வருகிறார்.
தூத்துக்குடியில் தொழில் போட்டியின் காரணமாக மீன் வியாபாரி உள்ளிட்ட இரண்ட பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்தி நகரை சேர்ந்தவர் வெள்ளத்துரை (50). இவர் கோவில்பட்டி ராமசாமி தாஸ் பூங்கா நுழைவு வாயிலில் மீன் கடை மற்றும் கோழி இறைச்சிக்கடை நடத்தி வருகிறார். வழக்கமாக இரவு கடையை மூடிய பின் கடையிலேயே படுத்து உறங்குவதை வெள்ளத்துரை வழக்கமாக கொண்டுள்ளார். அவருடன் கடையில் வேலை செய்யும் சாமி என்பவரும் இருப்பார்.
undefined
இதையும் படிங்க: கள்ளகாதலுக்கு இடையூறு! காதல் கணவன் துடிதுடிக்க கொலை.. சிக்கிய கூலிப்படை தலைவன்!
இந்நிலையில் வழக்கம் போல வெள்ளத்துரை சாமியும் இருவரும் தனது கடையில் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு இரண்டு இருசக்கர வாகனங்களில் முகமூடி அணிந்து வந்த 3 பேர் கடைக்குள் புகுந்து வெள்ளத்துரையை சரமாரியாக வெட்டினர். இதனை தடுக்க வந்த சாமியையும் சரமாரியாக வெட்டி விட்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பித்தது.
இதில் சாமி என்பவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். வெள்ளத்துரை படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது இருவரும் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தனர். 3 பேர், வெள்ளத்துரை மற்றும் மகாராஜாவை வெட்டிக் கொலை செய்வதும், அரிவாளுடன் தப்பிச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தொழில் போட்டி காரணமாக இக்கொலைச் சம்பவம் நடந்திருப்பது தெரிய வந்தது.
இதையும் படிங்க: கோயிலில் தூங்கிய 85 வயது கிழவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூர வாலிபர்கள்! சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!
வெள்ளத்துரையின் மீன் கடையில் இருந்து அதே வரிசையில் 4 கடை தள்ளி இருக்கும் கார்த்திக் என்பவரின் மீன் கடை உள்ளது. அக்கடையின் உரிமையாளர் கார்த்தி, அதே கடையில் வேலை செய்து வந்த சேர்மக்கனி, மாரிராஜ் ஆகியோர் இரட்டை கொலைச் சம்பவத்தை அரங்கேற்றியது தெரிய வந்தது. இதனையடுத்து 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் என் கடையை விட அந்த கடையிலதான் வியாபாரம் அதிகம் நடந்ததால் ஆத்திரத்தில் வெட்டி கொலை செய்ததாக கூறியுள்ளார்.