பள்ளி மாணவி பாலியல் பலாத்கார வழக்கு... நீதிமன்றம் வழங்கிய பரபரப்பு தீர்ப்பு.. என்ன தெரியுமா?

By vinoth kumar  |  First Published Jun 7, 2024, 3:27 PM IST

17 வயதுடைய பிளஸ்-2 மாணவியிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு ஆசைவார்த்தை கூறி அந்த மாணவியை தேனிக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 


பள்ளி மாணவியை ஆசைவார்தை கூறி பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. 

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (31). இவர் திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் பகுதியில் தங்கியிருந்து பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அப்போது 17 வயதுடைய பிளஸ்-2 மாணவியிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு ஆசைவார்த்தை கூறி அந்த மாணவியை தேனிக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 

Tap to resize

Latest Videos

undefined

இந்நிலையில், மகளை காணவில்லை என்று பதற்றம் அடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து இந்த புகாரை அடுத்து பெருமாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் மணிகண்டன் பள்ளி மாணவியை அழைத்து சென்றது தெரியவந்ததை அடுத்து அவரை மீட்டனர். 

பின்னர் போக்சோ சட்டத்தின் கீழ் மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில், அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்றதை அடுத்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் பாலியல் பலாத்காரம் செய்த மணிகண்டனுக்கு 20 ஆண்டு சிறைதண்டனையும், ரூ.5000 அபராதம் மற்றும் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச்சென்ற குற்றத்திற்காக 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2000 அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.50,000 இழப்பீடு வழங்கவும் பரிந்துரை செய்யப்பட்டது. 

click me!