மனைவி கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு கொஞ்சம் கூட பயம் இல்லாமல் ராணுவ வீரர் செய்த காரியம்!

Published : Jun 05, 2024, 06:16 PM ISTUpdated : Jun 05, 2024, 06:18 PM IST
மனைவி கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு கொஞ்சம் கூட பயம் இல்லாமல் ராணுவ வீரர் செய்த காரியம்!

சுருக்கம்

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த செல்லாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் விஜயன் (38). ராணுவ வீரர். இவர் தனது அக்காள் மகள் மோகனாவை (28) திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆதி (10), அனிருத் (10) என்ற இரட்டை குழந்தைகள் உள்ளனர். விஜயன் குடும்பமும், இவரது அண்ணன் குடும்பமும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். 

குடும்பத் தகராறில் தாலி கட்டிய மனைவியை கழுத்தை அறுத்து படுகொலை செய்துவிட்டு போதையில் தூங்கிய கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த செல்லாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் விஜயன் (38). ராணுவ வீரர். இவர் தனது அக்காள் மகள் மோகனாவை (28) திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆதி (10), அனிருத் (10) என்ற இரட்டை குழந்தைகள் உள்ளனர். விஜயன் குடும்பமும், இவரது அண்ணன் குடும்பமும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். 

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக அவரது அண்ணன் தனது குடும்பத்துடன் தனி குடித்தனம் சென்றார். இந்த சம்பவம் அசாம் மாநிலத்தில் பணியாற்றி வந்த ராணுவ வீரர் விஜயனுக்கு தெரியவந்தது. இதனால் விஜயனுக்கும்-மோகனாவுக்கும் தகராறு ஏற்பட்டது. விஜயன் கடந்த சில தினங்களுக்கு முன்பு விடுமுறைக்கு ஊருக்கு வந்துள்ளார். 

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு குடித்துவிட்டு வந்த விஜயன் அண்ணனை வீட்டை விட்டு வெளியே அனுப்பிய விவகாரம் தொடர்பாக மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.  இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த விஜயன் கத்தியால் மனைவி மோகனா கழுத்தை அறுத்துள்ளார். ரத்த வெள்ளத்தில் சரிந்த மோகனா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். 

பின்னர் விஜயன் போதையில் அங்கேயே படுத்து தூங்கிவிட்டார். மறுநாள் காலையில் மோகனா ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மோகனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மனைவியை கொலை செய்த ராணுவ வீரர் விஜயனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

PREV
click me!

Recommended Stories

இரவு பகல் பாராமல் எந்நேரமும் ஓயாமல் டார்ச்சர்! அதிமுக பிரமுகரின் மகளை இதற்காக தான் கொன்றேன்!
இரண்டு குழந்தைகளின் தாய் செய்ற வேலையா இது.. பழைய காதலனுக்காக புருஷனை போட்டு தள்ளிய மனைவி