கடந்த 22ம் தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு மனைவியுடன் கோயம்புத்தூரில் உள்ள தனது மகனின் வீட்டிற்கு சென்றுவிட்டு நேற்று காலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு, பீரோவில் வைத்திருந்த பல லட்சம் மதிப்பிலான நகைகள் திருடப்பட்டிருந்தது.
24 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்து, 14 லட்சத்து 45 ஆயிரம் மதிப்புள்ள 36 சவரன் தங்க நகைகள் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைர நெக்லஸை கைப்பற்றிய போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு
புதுக்கோட்டை கணேஷ் நகர் 1ம் வீதியில் பாதிரியார் ஜான் தேவசகாயம் (56) வசித்து வருகிறார். இவர் மாலையீடு அருகே உள்ள ஒரு தேவாலயத்தில் பாதிரியாராக உள்ளார். இவர் கடந்த 22ம் தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு மனைவியுடன் கோயம்புத்தூரில் உள்ள தனது மகனின் வீட்டிற்கு சென்றுவிட்டு நேற்று காலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு, பீரோவில் வைத்திருந்த பல லட்சம் மதிப்பிலான நகைகள் திருடப்பட்டதாக கொடுத்த புகாரின் அடிப்படையில், கணேஷ் நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
undefined
மேலும் திருட்டு சம்பவம் நடந்த அவரது வீட்டில் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை தேடும் பணி துரிதப்படுத்தப்பட்டது. மேலும் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே உத்தரவின் பேரில் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடிவந்த நிலையில் மதுரை மாவட்டம் உச்சப்பட்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்த கேதீஸ்வரன் (எ) சந்திரகுமாரை (36) கைது செய்தனர்.
மேலும் கைது செய்யப்பட்டவரிடமிருந்து 14 லட்சத்து 45 ஆயிரம் மதிப்புள்ள 36 பவுன் தங்க நகைகள் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைரம் நெக்லஸ் கைப்பற்றப்பட்டுள்ளது. பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளியை 24 மணி நேரத்தில் பிடிக்க உதவியாக இருந்த தனிப்படையினரை புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே நேரடியாக அழைத்து வெகுவாக பாராட்டினார். மேலும் குற்றம் நடந்த 24 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்த போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.