அம்மா என் கர்ப்பத்துக்கு காரணம் எங்க ஸ்கூல் ஹெட் மாஸ்டர் தான்! பள்ளியில் வைத்தே பலமுறை பலாத்காரம் செய்தாறு!

Published : May 29, 2024, 01:22 PM ISTUpdated : May 29, 2024, 01:27 PM IST
அம்மா என் கர்ப்பத்துக்கு காரணம் எங்க ஸ்கூல் ஹெட் மாஸ்டர் தான்! பள்ளியில் வைத்தே பலமுறை பலாத்காரம் செய்தாறு!

சுருக்கம்

அரசு பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்த மாணவி கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகளை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். 

அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு பள்ளி மாணவியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

கர்நாடகா மாநிலம் சிக்கபள்ளாப்பூர் மாவட்டம், சிட்லகட்டா கிராமத்தில் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், அப்பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்த மாணவி கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகளை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். 

இதையும் படிங்க: வாய் கூசும் அளவுக்கு டபுள் மீனிங்! ஆபாச ஆங்கரால் பெண் தற்கொலை முயற்சி!VJ ஸ்வேதாவை வீடு புகுந்து தூக்கிய போலீஸ்

அங்கு  மருத்துவர் பரிசோதனை செய்த போது பள்ளி மாணவி 3 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்ததை அடுத்து பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக சிறுமியிடம், அவரது பெற்றோர் விசாரித்தனர். அப்போது அழுத படியே பள்ளியின் தலைமை ஆசிரியர் பள்ளி அலுவலக அறையில்  வைத்து அடிக்கடி பலாத்காரம் செய்து வந்ததாக கூறியுள்ளார். இதுதொடர்பாக வெளியில் சொல்லக்கூடாது என மிரட்டியுள்ளார். 

இதனையடுத்து பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து , தலைமை ஆசிரியர் வெங்கடேஷனை கைது செய்து சிறையில் அடைத்தனர். அரசு பள்ளிக்குள் மாணவியை தலைமை ஆசிரியர் பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ஹவுஸ் ஓனரை வெட்ட வந்த கும்பல்.. தடுக்கச் சென்ற பெண் படுகொலை.. நடந்தது என்ன? வெளியான அதிர்ச்சி தகவல்.!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

திருமணமான ஒரு மாதத்தில் கணவருக்கு வந்த அந்த சந்தேகம்.. மனவேதனையில் கதறிய 26 வயது ஐஸ்வர்யா.. இறுதியில் அதிர்ச்சி
சிறுமியிடம் சில்மிஷம் செய்துவிட்டு எஸ்கேப்.. போலீசிக்கு தண்ணீ காட்டி குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள்.. 5 மாதங்களில் தீர்ப்பு