வயிற்றுப் பிழைப்புக்காக வந்த இடத்தில் இப்படியா? வாலிபரை கொலை செய்து செல்போன் பறிப்பு! சென்னையில் பயங்கரம்!

Published : May 28, 2024, 11:18 AM ISTUpdated : May 28, 2024, 11:20 AM IST
வயிற்றுப் பிழைப்புக்காக வந்த இடத்தில் இப்படியா? வாலிபரை கொலை செய்து செல்போன் பறிப்பு! சென்னையில் பயங்கரம்!

சுருக்கம்

பெற்றோர் குன்றத்தூர் அடுத்த தெற்கு மலையம்பாக்கத்தில் உள்ள செங்கல் சூளையில் பணிபுரிந்து வந்த நிலையில் அவர்களின் கடனை தீர்ப்பதற்காக கடந்த சில வாரங்களுக்கு முன்பு ராஜேஷ் தனது குடும்பத்தினருடன் செங்கல் சூளையில் பணிபுரிய வந்துள்ளார்.

இயற்கை உபாதை கழிக்க சென்றபோது வழிப்பறியில் ஈடுபட்ட நபர்கள் கத்தியால் வெட்டி கொலை செய்துவிட்டு செல்போன் மற்றும் பணத்தை பறித்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

விழுப்புரம் மாவட்டம்  முகையூர் அடுத்துள்ள ஆற்காடு கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ்(30). இவரது மனைவி செல்லம்மாள். இவர்களுக்கு இரண்டு வயது மற்றும் 10 மாத பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்களது பெற்றோர் குன்றத்தூர் அடுத்த தெற்கு மலையம்பாக்கத்தில் உள்ள செங்கல் சூளையில் பணிபுரிந்து வந்த நிலையில் அவர்களின் கடனை தீர்ப்பதற்காக கடந்த சில வாரங்களுக்கு முன்பு ராஜேஷ் தனது குடும்பத்தினருடன் செங்கல் சூளையில் பணிபுரிய வந்துள்ளார்.

இதையும் படிங்க: தீர்த்தம் கொடுத்து ஆசையை தீர்த்த கோவில் பூசாரி! அவரை போலீஸ் இன்னும் கைது செய்யாததால் பெண் எடுத்த அதிரடி முடிவு

நேற்று இரவு செம்பரம்பாக்கம் ஏரிக்கரையை ஒட்டி உள்ள பகுதியில் இயற்கை உபாதை கழிக்க நடந்து சென்ற போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் மூன்று பேர் அவரிடம் செல்போனை கேட்டு கத்தியை காட்டி மிரட்டி உள்ளனர். அவர் செல்போனை கொடுக்க மறுத்ததையடுத்து ஆத்திரமடைந்த மர்ம கும்பல் கத்தியை திருப்பி வைத்து அவரது தலை மற்றும் கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சரமாரியாக வெட்டி விட்டு அவரிடம் இருந்து செல்போன் மற்றும் பணத்தை பறித்து சென்றனர்.

இதையடுத்து அவரது அலறல் கேட்டு அங்கிருந்தவர்கள் வந்து பார்த்த போது ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். உடனே அவரை மீட்டு கோவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக  உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து குன்றத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து போன ராஜேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதையும் படிங்க:  கள்ளக்காதலனுடன் உல்லாசம்! நேரில் பார்த்த மகள் துடிதுடிக்க கொலை! நாடகமாடிய தாய் சிக்கியது எப்படி? பகீர் தகவல்!

பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செங்கல் சூளையில் பணி புரிந்து வந்த நபர் இயற்கை உபாதை கழிக்க சென்றபோது வழிப்பறியில் ஈடுபட்ட நபர்கள் கத்தியால் வெட்டி கொலை செய்துவிட்டு செல்போன் மற்றும் பணத்தை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

PREV
click me!

Recommended Stories

தனியாக இருந்த மாணவியை மிரட்டி ஆபாச வீடியோ பதிவு.. மக்கள் போராட்டத்தால் ம.பி.யில் பதற்றம்!
என் பொண்ண வாரி கொடுத்துட்டு இருக்கேன்! உனக்கு உல்லா*சம் கேக்குதா! டார்ச்சர் கொடுத்த திமுக வழக்கறிஞர் கொ*லை!