புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அருகே திருப்பட்டினம் நாகப்பட்டினம் - காரைக்கால் தேசிய நெடுஞ்சாலையில் திருமலைராஜன் ஆற்று பாலத்தில் சிறுவன் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
8ம் வகுப்பு மாணவன் சந்தோஷ்(13) சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் காரைக்காலில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அருகே திருப்பட்டினம் நாகப்பட்டினம் - காரைக்கால் தேசிய நெடுஞ்சாலையில் திருமலைராஜன் ஆற்று பாலத்தில் சிறுவன் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பிரேத பரிசோதனைக்காக காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: கள்ளக்காதலனுடன் உல்லாசம்! நேரில் பார்த்த மகள் துடிதுடிக்க கொலை! நாடகமாடிய தாய் சிக்கியது எப்படி? பகீர் தகவல்!
இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் உயிரிழந்த சிறுவன் சந்தோஷ்(13) என்பதும் 8-ம் வகுப்பு முடித்து விடுமுறையில் இருந்ததும் தெரியவந்தது. மேலும், விளையாடிக்கொண்டிருந்தபோது சிறுவனுக்கும் அதே பகுதியை சேர்ந்த 19 வயது இளைஞருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக கொலை நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: பாரினிலிருந்து ஸ்கெட்ச்! கூலிப்படை ஏவி கணவனை கொல்ல முயற்சி! கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் மனைவி ஆத்திரம்
எனவே சந்தேகத்தின் பேரில் அந்த இளைஞரை போலீசார் தேடிவருகின்றனர். காரைக்கால் பகுதியில் 13 சிறுவன் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.