இதற்காக தான் இந்து மறுமலர்ச்சி முன்னேற்ற முன்னணி மாநில தலைவரை கொன்றோம்! காங்கிரஸ் பிரமுகர் உட்பட 6 பேர் பகீர்!

By vinoth kumar  |  First Published May 23, 2024, 12:55 PM IST

இருசக்கர வாகனத்தில் லுங்கி மற்றும் பனியன் அணிந்தபடி டீக்கடைக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ராஜாஜியை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பித்தார்.  ரத்த வெள்ளத்தில் சரிந்த ராஜாஜி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். 


குமணன்சாவடியில் இந்து மறுமலர்ச்சி முன்னேற்ற முன்னணி மாநில தலைவர் ராஜாஜி கொலை செய்யப்பட்ட வழக்கில் காங்கிரஸ் பிரமுகர் உட்பட 6 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு அம்பாள் நகர் கிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் ராஜாஜி(45). இந்து மறுமலர்ச்சி முன்னேற்ற முன்னணியின் தலைவராக இருந்து வந்தார். இவரது மனைவி கலா இவர்களுக்கு திருமணமாகி இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை குமணன்சாவடியில் உள்ள டீக்கடையில் அமர்ந்து டீ குடித்து கொண்டிருந்தார்.

Tap to resize

Latest Videos

undefined

அப்போது இருசக்கர வாகனத்தில் லுங்கி மற்றும் பனியன் அணிந்தபடி டீக்கடைக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ராஜாஜியை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பித்தார்.  ரத்த வெள்ளத்தில் சரிந்த ராஜாஜி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இது குறித்து பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கொலை செய்யப்பட்ட ராஜாஜி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளின் ஆய்வு செய்ததில் கொலை சம்பவத்தில் ஈடுபட்டது காட்டுப்பாக்கத்தை சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, கிருஷ்ணகுமார், திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணை தலைவரான பூந்தமல்லியை சேர்ந்த கோபால், சம்பத், சந்தோஷ், ராஜேஷ் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதில், காங்கிரஸ் பிரமுகர் கோபாலின் மனைவி  கௌரி, கடந்த சில ஆண்டுகளாக கோபாலை விட்டு பிரிந்து ராஜாஜியுடன் வசித்து வந்தார். இந்நிலையில், ராஜாஜி, கவுரியை தன் மனைவி என குறிப்பிட்டு, சமூக வலைதள பக்கங்களில் இருவரும் ஒன்றாக எடுத்து கொண்ட புகைப்படங்களை பதிவிட்டு வந்ததால் கொலை நடைபெற்றதாக கூறப்படுகிறது.  

click me!