Asianet News TamilAsianet News Tamil

பள்ளி மாணவிகளை பாலியல் தொழிலில் தள்ளி சீரழித்த கொடூர கும்பல்.. ஆக்‌ஷனில் இறங்கிய சென்னை கமிஷனர்.!

பெண் புரோக்கரான நதியாவின் மகள் 12ம் வகுப்பு படித்து வருகிறார். அவருடன் பள்ளியில் படிக்கும் அழகான ஏழ்மையான மாணவிகளுக்கு ஆசைவார்த்தை கூறி நதியா பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. 12ம் வகுப்பு படிக்கும் தனது மகள் மூலம் அவரது பள்ளி தோழிகளுக்கு வலைவீசியுள்ளார்.

Engaging school girls Prostitution Case...Goonda's Act law passed on 4 people tvk
Author
First Published Jun 13, 2024, 8:48 AM IST

சென்னையில் பள்ளி மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. 

சென்னையில் பள்ளி மாணவிகளை வைத்து பாலியல் தொழில் நடப்பதாக ரகசியத் தகவலின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இதனையடுத்து சென்னை வளசரவாக்கம் ஜெய்நகர் 2வது தெருவில் ஒரு வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு 17 வயது சிறுமியிடம் உல்லாசம் அனுபவிக்க வந்த சென்னை மேற்கு சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் (70) என்ற முதியவர் சிக்கினார்.  பிளஸ்-2 படிக்கும் பள்ளி மாணவிகள் சிலர் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டது தெரியவந்தது. 

இதையும் படிங்க: சென்னையில் பள்ளி மாணவிகளை வைத்து விபச்சாரம்! மகள் மூலம் வலை விரிப்பு! ஒரு நைட்டுக்கு எவ்வளவு தெரியுமா? பகீர்!

இதனையடுத்து முதியவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சென்னை தியாகராயநகர் டாக்டர் தாமஸ் சாலையை சேர்ந்த பிரபல விபச்சார பெண் தரகர் நதியா (37) அந்த சிறுமியை அனுப்பி வைத்ததாக கூறினார். இதனையடுத்து நதியா அவரது சகோதரி சுமதி உள்ளிட்டவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது. பெண் புரோக்கரான நதியாவின் மகள் 12ம் வகுப்பு படித்து வருகிறார். அவருடன் பள்ளியில் படிக்கும் அழகான ஏழ்மையான மாணவிகளுக்கு ஆசைவார்த்தை கூறி நதியா பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. 12ம் வகுப்பு படிக்கும் தனது மகள் மூலம் அவரது பள்ளி தோழிகளுக்கு வலைவீசியுள்ளார்.

இதனையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ், பிரபல பெண் பாலியல் புரோக்கர் நதியா(37), அவரது சகோதரி சுமதி(43), சகோதரியின் இரண்டாவது கணவர் ராமச்சந்திரன்(42), நேபாள நாட்டை சேர்ந்த இளம் பெண் மாயா ஒலி(29) மற்றும் பள்ளி மாணவிகள் என்று தெரிந்து அடிக்கடி பாலியல் உறவு வைத்த அசோக்குமார்(31), சைதாப்பேட்டையை சேர்ந்த 70 வயது முதியவர் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர். பள்ளி மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய விவகாரம் ஆளுநர் மாளிகையில் குண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்ட கருக்கா வினோத்தின் தொடர்பில் இருந்த நதியா வீட்டில் சோதனை நடத்திய போது அவரிடம் இருந்த செல்போன்களை ஆராய்ந்தபோது 17 சிறுமிகளின் புகைப்படங்கள் என்ஐஏவிடம் சிக்கியதை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. 

இதையும் படிங்க:  கருக்கா வினோத்தால் என்ஐஏவிடம் வசமாக சிக்கிய சென்னை பாலியல் கும்பல்.. நடந்தது என்ன? வெளியான பரபரப்பு தகவல்!

இந்நிலையில் பள்ளி சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில் கைதான 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே கைது செய்யப்பட்ட நதியா, ராமச்சந்திரன், தண்டபாணி, மாய ஒலி ஆகியோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios