திருவான்மியூர் தெற்கு நிழற்சாலை பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க வந்த வழக்கறிஞர் மர்ம கும்பலால் ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டி விட்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது.
சென்னையில் நடுரோட்டில் வழக்கறிஞர் ஓட ஒட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அவரது நண்பர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை திருவான்மியூர் அவ்வை நகர் பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் கௌதம்(24). சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் திருவான்மியூர் தெற்கு நிழற்சாலை பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க வந்த வழக்கறிஞர் மர்ம கும்பலால் ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டி விட்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது.
undefined
இதையும் படிங்க: என்னது.. 25க்கும் மேற்பட்ட பெண்களை சீரழித்த கோயில் பூசாரிக்கு ஜாமீனா? லெப்ட் ரைட் வாங்கிய நீதிபதி!
ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக திருவான்மியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது குற்றவாளியை அடையாளம் கண்டனர். கௌவுதமை கொலை செய்தது ஏன்? என்பது குறித்து முக்கிய குற்றவாளி கமலேஷ் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: கொலை வெறியில் அண்ணனை தேடி வந்த கும்பல்! சிக்கிய தம்பியை சின்னா பின்னமாக்கிய கொடூரம்.. சென்னையில் பயங்கரம்!
அதில், வழக்கறிஞர் கௌதமும் நானும் உயிர் நண்பர்கள். என்னை விட்டு பிரிந்து திருவான்மியூர் சென்ற பிறகு, கௌதமின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டது. குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களோடு தொடர்பில் இருந்து வந்தார். பாலவாக்கத்தை சேர்ந்த மதன்குமாருக்கும் எனக்கும் சண்டை ஏற்பட்டது. ஆனால் எனது நட்பை மீறி கௌதம், மதன்குமாருக்கு ஆதரவாக செயல்பட்டார். இதனால் அவரை கொலை செய்ய திட்டமிட்டேன். அதன்படி தனது நண்பர்களுக்கு சேர்ந்து கொலை செய்தேன் என கூறினார். இதனையடுத்து கைது செய்யப்பட்ட 3 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.