Student Suicide: பரபரப்பு..!பள்ளியின் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துக்கொண்ட மாணவி..

Published : Mar 12, 2022, 10:25 PM IST
Student Suicide: பரபரப்பு..!பள்ளியின் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துக்கொண்ட மாணவி..

சுருக்கம்

நாமக்கல் மாவட்டம் திருசெங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் வாந்தி வருவதாக கூறிக்கொண்டு வெளியே சென்று,  பள்ளி வளாக கட்டிடத்தின் இரண்டாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

நாமக்கல் மாவட்டம் திருசெங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் வாந்தி வருவதாக கூறிக்கொண்டு வெளியே சென்று,  பள்ளி வளாக கட்டிடத்தின் இரண்டாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நாமக்கல் மாவட்டம் திருசெங்கோடு சீதாராம்பாளையத்தை சேர்ந்த தச்சு தொழிலாளியான சங்கர் என்பவரின் இரண்டாவது மகள் அர்ச்சனா. இவருக்கு வயது 14.  இவர் திருசெங்கோடு அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

மேலும் படிக்க: அவ எவ்வளவு சொல்லியும் கேட்கல.. தம்பியுடன் அடிக்கடி அசிங்கம்.. தூக்கத்திலயே போட்டு தள்ளிட்டேன்.. கணவன் பகீர்.

இதனிடையே இன்று வழக்கம் போல் காலை பள்ளிக்கு சென்ற அந்த மாணவி, மதியம் 2.30 மணியளவில் வாந்தி வருவதாக கூறி வகுப்பறையில் இருந்து வெளியே சென்றுள்ளார்.  ஆனால், அவர் பள்ளி வளாக கட்டிடத்தின் இரண்டாவது மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஆசியர்கள், சக மாணவிகள் உடனே ஆம்புலன்ஸ் அழைத்து உள்ளனர். மேலும் திருசெங்கோடு நகர காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க: மாணவிக்கு செக்ஸ் மெசேஜ் அனுப்பிய காலேஜ் புரோபசர்... தமிழகத்தில் தொடரும் பாலியல் குற்றங்கள்!!

இதனையடுத்து பலத்த காயமடைந்த மாணவியை பள்ளி ஆசிரியர்கள் மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து திருச்செங்கோடு நகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் படிக்க: இந்த வயசுல இது தேவையா? குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து துடிதுடிக்க கொன்ற பாட்டியின் கள்ளக்காதலன்..!

பள்ளியில் பாலியல் ரீதியாக தொந்தரவு ஏதும் இருந்ததா..? இல்லை வேறு ஏதும் காரணங்களா.? எனும் கோணங்களிலும்  போலீசார் விசாரித்து வருகின்றனர்.மேலும், பள்ளி கல்வித்துறை அதிகாரிகளும் மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் நாமக்கல் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஐடி நிறுவன பெண் மேலாளர் ஓடும் காரில் வைத்து கூட்டு பலாத்காரம்! ரசித்த மற்றொரு பெண்.. CEO செய்த கொடூரம்
இது இருக்கறதாலதான பொண்ணுங்க கூட ஓவராக ஆட்டம் போடுற! ஃபுல் மப்பில் தூங்கிய கணவரை கதறி அலறவிட்ட மனைவி.!