இந்த வயசுல இது தேவையா? குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து துடிதுடிக்க கொன்ற பாட்டியின் கள்ளக்காதலன்..!

Published : Mar 12, 2022, 11:58 AM ISTUpdated : Mar 12, 2022, 12:47 PM IST
இந்த வயசுல இது தேவையா? குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து துடிதுடிக்க கொன்ற பாட்டியின் கள்ளக்காதலன்..!

சுருக்கம்

குழந்தைகள் 2 பேரையும் சஜீவின் பெற்றோரிடம் ஒப்படைக்க குழந்தைகள் நல அமைப்பு உத்தரவிட்டது. இதனால் கடந்த சில மாதங்களாக 2 குழந்தைகளையும் சஜீவின் தாய் சிப்சி தான் கவனித்து வந்துள்ளார். இதற்கிடையே சிப்சிக்கும் எர்ணாகுளத்தை சேர்ந்த ஜான் பினோய் டிக்ரூஸ்க்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. 

கொச்சியில் ஓட்டல் அறையில் பெண் குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து கொன்ற பாட்டியின் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே அங்கமாலியை சேர்ந்தவர் சஜீவ். அவரது மனைவி டிக்சி. இந்த தம்பதிக்கு 4 வயதில் ஒரு ஆண் குழந்தை, ஒன்றரை வயதில் நோரா மரியா என்ற ஒரு பெண் குழந்தை. சஜீவனின் தாய் சிப்சி (50). தாய், மகன் 2 பேரும் போதைப்பொருள் கடத்தல் உள்பட பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த விவகாரம் மனைவிக்கு தெரியவந்ததையடுத்து கணவரை பிரிந்து தாய் வீட்டில் வசித்து வந்தார். 

பாட்டியின் கள்ளக்காதலன்

இந்நிலையில், டிக்சிக்கு துபாயில் ஒரு ஓட்டலில் வேலை கிடைத்தது. இதையடுத்து குழந்தைகளை பெற்றோரிடம் விட்டுவிட்டு துபாய் சென்றார். இதற்கிடையே தனது குழந்தைகள், மனைவியின் வீட்டில் பாதுகாப்பாக இல்லை என்று கூறி சஜீவ் குழந்தைகள் நல அமைப்பிடம் புகார் செய்தார். இதையடுத்து குழந்தைகள் 2 பேரையும் சஜீவின் பெற்றோரிடம் ஒப்படைக்க குழந்தைகள் நல அமைப்பு உத்தரவிட்டது. இதனால் கடந்த சில மாதங்களாக 2 குழந்தைகளையும் சஜீவின் தாய் சிப்சி தான் கவனித்து வந்துள்ளார். இதற்கிடையே சிப்சிக்கும் எர்ணாகுளத்தை சேர்ந்த ஜான் பினோய் டிக்ரூஸ்க்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே தனது மகனின் 2வது குழந்தை தனக்கு பிறந்தது என்றும், அதற்கு ஜான் தான் காரணம் என்று கூறி ஜானை சிப்சி மிரட்டி வந்துள்ளார்.

ஓட்டலில் ரூம்

இதனால் சிப்சி மீது ஜானுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இதையடுத்து குழந்தையை கொல்ல ஜான் திட்டமிட்டார். இந்நிலையில், ஓட்டல் ஒன்றில் சிப்சியும், ஜானும் அறை எடுத்து தங்கினர். அப்போது யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க சிப்சி 2 பேரக் குழந்தைகளையும் அழைத்து வந்திருந்தார். ஆகவே 3 நாள் தொடர்ந்து 4 பேரும் ஓட்டல் அறையில் தங்கி இருந்தனர். இந்நிலையில் கடந்த 8ம் தேதி 2 குழந்தைகளையும் ஜானிடம் விட்டுவிட்டு சிப்சி வெளியே சென்று இருந்தார். அப்போது, ஓட்டல் கழிப்பறையில் இருந்த வாளித் தண்ணீரில் குழந்தையை மூழ்கடித்து துடிதுடிக்க கொன்றுள்ளார். குழந்தை மயங்கி இருப்பதாக சிப்சிக்கு ஜான் போன் செய்துள்ளார். 

இதையும் படிங்க:- நடுவானில் பறந்த விமானம்.. தூக்கத்தில் அந்த இடத்தில் கை வைத்த இளைஞர்.. அதிர்ந்து எழுந்த பெண் செய்த காரியம்.!

குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து கொலை

இதனையடுத்து, குழந்தையை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். பால் குடிக்கும் போது குழந்தை மயங்கி விட்டதாக அங்கிருந்த மருத்துவர்களிடம் 2 பேரும் கூறி உள்ளனர். ஆனால், அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தையை ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். 

இவர்களது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த மருத்துவமனை நிர்வாகம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் இவர்கள் கணவன்,  மனைவி இல்லை என்பது தெரியவந்தது. மேலும் குழந்தைக்கு நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் குழந்தை நீரில் மூழ்கடித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து, ஜானை போலீசார் கைது செய்தனர்.

இதையும் படிங்க: நண்பனின் மனைவியை கட்டிலில் கட்டிபோட்டு மாறி மாறி கதற கதற பலாத்காரம்.. திருவண்ணாமலையில் பயங்கரம்.!

PREV
click me!

Recommended Stories

இரவு பகல் பாராமல் எந்நேரமும் ஓயாமல் டார்ச்சர்! அதிமுக பிரமுகரின் மகளை இதற்காக தான் கொன்றேன்!
இரண்டு குழந்தைகளின் தாய் செய்ற வேலையா இது.. பழைய காதலனுக்காக புருஷனை போட்டு தள்ளிய மனைவி