ஸ்கூல்ல சேர்ந்து மூன்று நாள் தான் ஆகுது.. அதுக்குள்ள கண்ட இடத்தில் கை வைத்து பாலியல் சீண்டல்.! ஆசிரியர் கைது

By vinoth kumar  |  First Published Jul 29, 2022, 3:03 PM IST

கண்ட இடத்தில் கை வைத்து மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் பிரபாகரன் கைது செய்யப்பட்டுள்ளார். 


கண்ட இடத்தில் கை வைத்து மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் பிரபாகரன் கைது செய்யப்பட்டுள்ளார். 

கோவை குனியமுத்தூரை அடுத்த சுகுணாபுரத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பிரபாகரன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் முன்னதாக வால்பாறையில் உள்ள பள்ளியில் பணியாற்றி வந்தார். பின்னர் அங்கிருந்து கடந்த 4 நாட்களுக்கு முன்பு தான் இந்த பள்ளிக்கு வந்தார். பள்ளிக்கு வந்த நாளில் இருந்தே இவர் அங்கு படிக்கும் மாணவிகளிடம் தொட்டு பேசுவது, என பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்துள்ளார். 

Tap to resize

Latest Videos

நாளுக்கு நாள் அவரது தொல்லை அதிகரிக்க மாணவிகள் தங்கள் பெற்றோர்களிடம் முறையிட்டனர். இதை கேட்டு மாணவிகளின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அந்த பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளின் பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் இன்று காலை பள்ளி முன்பு திரண்டனர். அவர்கள் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை உடனே பணியை விட்டு நீக்க வேண்டும். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

இதனையடுத்து, மாநகர உதவி காவல் ஆணையர் தலைமையிலான போலீசார் பள்ளியில் விசாரணை மேற்கொண்டதை அடுத்து ஆசிரியர் பிரபாகரனை கைது செய்தனர். அவர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே மாவட்ட ஆட்சியர் சமீரனின் பரிந்துரையின் பேரில் ஆசிரியர் பிரபாகரனை, மாவட்ட கல்வி அதிகாரி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். உடற்கல்வி ஆசிரியர் பிராபகரன் இந்த பள்ளிக்கு வந்து மூன்று நாட்களே ஆவது குறிப்பிடத்தக்கது. 

click me!