தண்ணீர் பிடிக்க வந்த சிறுமியிடம் கண்ட இடத்தில் கை வைத்து சில்மிஷம்.. கம்பி எண்ணும் 70 வயது கிழவன்..!

Published : Aug 04, 2022, 12:16 PM ISTUpdated : Aug 04, 2022, 12:17 PM IST
தண்ணீர் பிடிக்க வந்த சிறுமியிடம் கண்ட இடத்தில் கை வைத்து சில்மிஷம்.. கம்பி எண்ணும் 70 வயது கிழவன்..!

சுருக்கம்

தெரு குழாயில் தண்ணீர் பிடிக்க  வரும்போதெல்லாம் சிறுமிக்கு கண்ட இடத்தில் கை வைத்து பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தெரு குழாயில் தண்ணீர் பிடிக்க  வரும்போதெல்லாம் சிறுமிக்கு கண்ட இடத்தில் கை வைத்து பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த 33 வயது பெண் கடந்த 1ம் தேதி அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அதில், எனது 13 வயது மகள் ஒரு வாரமாக யாருடனும் பேசாமல் சோகத்தில் இருந்து வந்துள்ளார். இதுதொடர்பாக மகளிடம் கேட்ட போது அதே பகுதியை சேர்ந்த 70 வயது மதிக்கத்தக்க முதியவர், தெரு குழாயில் குடிநீர் தண்ணீர் பிடிக்க செல்லும்போது தினமும்  பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக கூறி கதறி அழுதுள்ளார். 

இதையும் படிங்க;- "அண்ணா என்ன விட்ருங்க; கெஞ்சிக் கதறியும் விடாமல் பெண்ணை வீடு புகுந்து தூக்கிச் சென்ற 15 பேர; பகீர் வீடியோ.!

எனவே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என புகாரில் கூறியிருந்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர், முதியவர் வீரப்பனை(70) போலீசார் அதிரடியாக கைது செய்தனர். 

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சிறுமி தினமும் காலை நேரத்தில் தெரு குழாயில் குடிநீர் தண்ணீர் பிடிக்க வரும்போது பாலியல் தொந்தரவு கொடுத்தேன் என உண்மையை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வீரப்பனை கைது செய்து, சென்னை மகிளா சிறப்பு மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறை சிறையில் அடைக்கப்பட்டார். 

இதையும் படிங்க;- வெளிநாடு சென்ற கணவன்! சைடு கேப்பில் மகளை கள்ளக்காதலனுக்கு விருந்தாக்க முயன்ற கொடூர தாய்! வெளியான பகீர் சம்பவம்

PREV
click me!

Recommended Stories

முதலிரவில் அதிர்ச்சி.. திருமணமான 3 நாளில் விவாகரத்து கேட்ட புதுப்பெண்! நடந்தது என்ன?
ஆண்ட்டியின் அழகில் மயங்கிய கொரியர் ஊழியர்.. ரவுடியின் மனைவிக்கு விடாமல் காதல் மெசேஜ்.. இறுதியில் நடந்த அதிர்ச்சி