எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டியா! வாலிபர் துடிதுடிக்க ரத்த வெள்ளத்தில் படுகொலை!சினிமா பாணியில் நடந்த பயங்கரம்

By vinoth kumarFirst Published Aug 4, 2022, 10:04 AM IST
Highlights

ஆற்காடு அருகே ஏரியில் அனுமதியின்றி மீன் பிடித்த தகராறில் வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தந்தை, மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆற்காடு அருகே ஏரியில் அனுமதியின்றி மீன் பிடித்த தகராறில் வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தந்தை, மகன் கைது செய்யப்பட்டுள்ளார். 

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த திமிரி ராமபாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் விலாரி ஏரியில் மீன் பிடிப்பதற்காக குத்தகை எடுத்துள்ளார். இவரிடம் திமிரி ராமபாளையம் ரோட்டை சேர்ந்த தினகரன் (45), இவரது மகன் அசோக்குமார் (24) ஆகியோர் மீன் பிடிப்பதற்கு உதவியாக இருந்து வருகின்றனர். இந்நிலையில், ராமபாளையம் பகுதியை சேர்ந்த கலையரசன் (22) என்பவர் இரவு நேரங்களில் விலாரி ஏரியில் குத்தகைதாரர்களுக்கு தெரியாமல் மீன்பிடிப்பதாக தெரிகிறது. 

இதையும் படிங்க;- உன் லவ் உண்மைனா.. இதை நீ செய்யணும்.. மாணவிக்கு காதலன் வைத்த கொடூரமான டெஸ்ட்..!

இதுதொடர்பாக சுப்பிரமணி, தினகரன் ஆகியோர் கலையரசனிடம் கேட்டுள்ளனர். இதனால், தகராறு ஏற்பட்டது. இதில் கலையரசன் தரப்பினர் சுப்பிரமணியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து திமிரி போலீசில் அளித்திருந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்ததனர். 

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஏரியில் மீண்டும் கலையரசன் மீன் பிடித்ததாக கூறப்படுகிறது. நேற்று தினகரன் தட்டி கேட்டதால் மீண்டும் தகராறு ஏற்பட்டது. கலையரசனுக்கு ஆதரவாக அவரது நண்பர்களும் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. அப்போது கலையரசன், கத்தியை காட்டி தினகரனை மிரட்டியுள்ளார். இதைக்கண்ட தினகரனின் மகன் அசோக்குமார் அந்த கத்தியை பறித்து கலையரசனை வெட்டியுள்ளார். படுகாயமடைந்த கலையரசனை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். 

இதையும் படிங்க;- டியூஷன் வந்த மாணவியுடன் கள்ளக்காதல்.. எவ்வளவு சொல்லியும் கேட்காத கணவர் உல்லாசம்..!

இதுதொடர்பாக திமிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து பதுங்கியிருந்த தினகரன், அசோக்குமார் ஆகியோரை கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

click me!