ஒன்றாக உட்கார்ந்து சரக்கு அடித்து.. பிரபல சீரியல் துணை நடிகைக்கு கண்ட இடத்தில் கை வைத்து பாலியல் தொல்லை..!

By vinoth kumar  |  First Published Jun 14, 2022, 12:42 PM IST

தொலைக்காட்சி தொடரில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாக காசிநாதன் அந்த துணை நடிகையிடம் ஆசைவார்த்தை கூறியுள்ளார். மேலும், இதற்கு போட்டோ ஷூட் நடத்த வேண்டும் என்று கூறிய ஒளிப்பதிவாளர் துணை நடிகையை தனது வீட்டுக்கு வரும்படி அழைத்துள்ளார். இதனை நம்பிய துணை நடிகையும் ஒளிப்பதிவாளர் வீட்டிற்குச்சென்றார். அவரது வீட்டில் இருவரும் உட்கார்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது.


சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி துணை நடிகையை வீட்டிற்கு அழைத்து மது குடிக்க வைத்து பாலியல் தொல்லை கொடுத்த ஒளிப்பதிவாளரை போலீசார் கைது செய்துள்ளனர். 

துணை நடிகை

Tap to resize

Latest Videos

சென்னை கொளத்தூரை சேர்ந்த 22 வயது இளம்பெண் தொலைக்காட்சி தொடர்களில் துணை நடிகையாக நடித்து வருகிறார். வளசரவாக்கம் ஓம் சக்தி நகரை சேர்ந்த காசிநாதன் (42), தொலைக்காட்சி தொடர்களுக்கு கேமராமேனாக பணிபுரிந்து வருகிறார். ஒரு தொலைக்காட்சி தொடர் படப்பிடிப்பின்போது துணை நடிகைக்கு காசிநாதன் அறிமுகமாகியுள்ளார்.

பாலியல் தொல்லை

இந்நிலையில் தொலைக்காட்சி தொடரில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாக காசிநாதன் அந்த துணை நடிகையிடம் ஆசைவார்த்தை கூறியுள்ளார். மேலும், இதற்கு போட்டோ ஷூட் நடத்த வேண்டும் என்று கூறிய ஒளிப்பதிவாளர் துணை நடிகையை தனது வீட்டுக்கு வரும்படி அழைத்துள்ளார். இதனை நம்பிய துணை நடிகையும் ஒளிப்பதிவாளர் வீட்டிற்குச்சென்றார். அவரது வீட்டில் இருவரும் உட்கார்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது.

கேமராமேன் கைது

இதையடுத்து அந்த பெண்ணை காசிநாதன் பாலியல் தொல்லை செய்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த வளசரவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து காசிநாதனை கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையும் படிங்க;- உடலுறவினால் ஏற்பட்ட சம்பவம்.. எங்களுக்கு குழந்தை பிறக்காது - கணவன் மனைவி எடுத்த விபரீத முடிவு

click me!