அடுத்த அதிர்ச்சி சம்பவம் .! கோவை பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. வசமாக சிக்கிய கொடூர ஆசிரியர்

Published : Jul 29, 2022, 04:16 PM IST
அடுத்த அதிர்ச்சி சம்பவம் .! கோவை பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. வசமாக சிக்கிய கொடூர ஆசிரியர்

சுருக்கம்

கோவை உள்ள பள்ளி ஒன்றில் உடற்கல்வி ஆசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாநகரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவி மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வரும் பிரபாகரன் என்பவர் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.  இதையடுத்து சில மாணவிகள் இது தொடர்பாக தங்களின் பெற்றோர்களிடம் கூறியதைத் தொடர்ந்து நேற்றைய தினம் பெற்றோர்கள் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்துள்ளனர். 

ஆனால் அந்த புகாரின் பேரில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த மக்கள் இன்று காலை 200க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். வருவாய் கோட்டாட்சியர் இளங்கோ மற்றும் காவல்துறை துணை ஆணையர் உள்ளிட்டோர் விரைந்து சென்று பள்ளி தலைமை ஆசிரியர், சக ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் என அனைத்து தரப்பினரிடமும் விசாரணை மேற்கொண்டனர். 

மேலும் செய்திகளுக்கு..கள்ளக்குறிச்சியில் ‘சாதி’ சண்டை வெடிக்கும்..ஸ்ரீமதி மரண சர்ச்சை - உளவுத்துறை பகீர் தகவல் !

இந்த விசாரணையில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படும் ஆசிரியர் பிரபாகரன் கோவை மாவட்டம் வால்பாறை அரசு பள்ளியில் இருந்து கடந்த வாரம் மாறுதலாகி சுகுணாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு வந்ததாகவும் வந்த சில தினங்களிலேயே பல மாணவிகளிடம் பாலியல் ரீதியிலான சீண்டல்களில் ஈடுபட்டதாகவும் பாலியல் தொடர்பாக மாணவிகளிடம் பேசியதும் தெரிய வந்தது. கோவை சரவணம்பட்டி பகுதியில் வைத்து ஆசிரியர் கைது செய்யப்பட்டார் என காவல்துறையினர் தெரிவிக்கவே சமாதானம் அடைந்த பெற்றோர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். 

பள்ளி அருகே உள்ள பகுதியில் காவல்துறையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டு அங்கு பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளிக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோவையில் அரசு பள்ளி ஆசிரியர் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகளுக்கு..MiG-21 போர் விமானதிற்கு மூடுவிழா.. அபிநந்தன் முதல் அவனி சதுர்வேதி வரை.. சாதனை படைத்த வரலாறு தெரியுமா?

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

முதலிரவில் அதிர்ச்சி.. திருமணமான 3 நாளில் விவாகரத்து கேட்ட புதுப்பெண்! நடந்தது என்ன?
ஆண்ட்டியின் அழகில் மயங்கிய கொரியர் ஊழியர்.. ரவுடியின் மனைவிக்கு விடாமல் காதல் மெசேஜ்.. இறுதியில் நடந்த அதிர்ச்சி