நைட் ஷிப்டுக்கு வந்த இளம் பெண்ணிடம் கண்ட இடத்தில் கை வைத்து சில்மிஷம்.. அடுத்த நிமிடமே ஐடி ஊழியர் கைது.!

Published : Feb 21, 2023, 01:28 PM ISTUpdated : Feb 21, 2023, 01:31 PM IST
நைட் ஷிப்டுக்கு வந்த இளம் பெண்ணிடம் கண்ட இடத்தில் கை வைத்து சில்மிஷம்.. அடுத்த நிமிடமே ஐடி ஊழியர் கைது.!

சுருக்கம்

சென்னை சோழிங்கநல்லூரில் 23 வயது இளம்பெண் ஐடி நிறுவனத்தில் மென்பொறியாளராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம் போல இரவு பணிக்கு சென்றுள்ளார். 

சென்னையில் இரவு பணிக்கு வந்த இளம்பெண்ணுக்கு கண்ட இடத்தில் கை வைத்து பாலியல் தொல்லை கொடுத்த ஐடி ஊழியர் கைது செய்யப்பட்டார்.

இந்தியா முழுவதும் நாளுக்கு நாள் பாலியல் அத்துமீறல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக பள்ளி, கல்லூரி, வேலை செய்யும் இடங்களில் அதிகரித்துள்ளது. இந்நிலையில், சென்னை சோழிங்கநல்லூரில் 23 வயது இளம்பெண் ஐடி நிறுவனத்தில் மென்பொறியாளராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம் போல இரவு பணிக்கு சென்றுள்ளார். 

இதையும் படிங்க;- என்னோட மனைவியை உஷார் செஞ்சிட்டியா நீ... உன்ன சும்மா விட மாட்டேன் டா.. பீகார் இளைஞருக்கு நேர்ந்த பயங்கரம்.!

பின்னர், டீ குடிப்பதற்காக அந்த பெண் வெளியில் கடைக்கு வந்துள்ளார். அதே கடைக்கு தெலுங்கானாவை சேர்ந்த சாம் சுந்தர் (29) என்ற ஐ.டி ஊழியர் டீ குடிக்க சென்றுள்ளார். அப்போது, அந்த பெண்ணுக்கு சாம் சுந்தர் கண்ட இடத்தில் கை வைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை அந்த பெண் கடுமையாக கண்டித்துள்ளார். அப்படி இருந்த போதிலும் பாலியல் தொல்லை கொடுத்து தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். 

இதையும் படிங்க;-  மஸ்தான் கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. குடும்பமே ஸ்கெட்ச் போட்டு தூக்கியது அம்பலம்.. வெளியான அதிர்ச்சி தகவல்

இதுகுறித்து அப்பெண் உடனே காவல் கட்டுப்பாட்டு அறையில் புகார் அளித்தார். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த செம்மஞ்சேரி போலீசார் சாம்சுந்தரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க;- உல்லாச வீடியோவை காட்டி மிரட்டல்.. நான் இப்போ 2 மாசம் கர்ப்பமாக இருக்கேன்.. ப்ளீஸ் என்னை விட்டுடுங்க பெண் கதறல்

PREV
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான பெண் தாதா அஞ்சலைக்கு 2 ஆண்டு சிறை! எந்த வழக்கில் தெரியுமா?
காதலியை ஆசைவார்த்தை கூறி காட்டுக்கு அழைத்து சென்ற காதலன்! அலறிய சித்ரப் பிரியா! அடுத்து நடந்த அதிர்ச்சி!