புதுச்சேரியில் ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்ததால் விரக்தியடைந்த 12ம் வகுப்பு மாணவி பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு படுகை அணை ஆற்றில் இளம்பெண் ஒருவர் திடீரென 60 அடி உயர பாலத்தில் இருந்து கீழே குதித்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆற்றில் சீரான அளவில் தண்ணீர் இருந்ததால் அவரது உயிருக்கு ஆபத்து எதுவும் ஏற்படவில்லை.
இதுகுறித்து அரியாங்குப்பம் போலிசார் விசாரணை மேற்கொண்டதில். 60 அடி உயர ஆற்றுப்பாலத்தில் இருந்து கீழே விழுந்தது 12ம் வகுப்பு மாணவி என்பது தெரிய வந்தது. மேலும் அந்த மாணவியை சிவராத்திரியன்று இரவு முழுவதும் காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் அவர்களுக்கு தெரிந்த பகுதி முழுவதும் மாணவியை தேடியுள்ளனர்.
ஓரினசேர்க்கைக்காக வடமாநில இளைஞர் கடத்த முயற்சி; கத்தி, கூச்சலிட்டதால் தப்பி ஓட்டம்
இந்த நிலையில் தனியார் பேருந்து நிறுவனம் ஒன்றில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றும் பாபு என்பவர் ஆசை வார்த்தை கூறி அந்த மாணவியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக மாணவி தெரிவித்துள்ளார். மேலும் இதனை வீட்டில் சொல்ல பயந்து இயல்பாக வீட்டிற்கு வந்துள்ளார். மாணவியை காணாமல் தேடிய விரக்தியில் அவரது பெற்றோர் மாணவியை கண்டித்துள்ளனர்.
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டியில் பங்கேற்ற வட்டாட்சியர் திடீர் மரணம்
இதனால் மனமுடைந்து அவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையடுத்து போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து பாபுவை காவல் துறையினர் கைது செய்து காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.