10ம் வகுப்பு மாணவி 7 மாதம் கர்ப்பம்.. அதிர்ச்சியில் பெற்றோர்.. 12ம் வகுப்பு மாணவன் மீது போக்சோ..!

By vinoth kumar  |  First Published Feb 21, 2023, 12:42 PM IST

மாணவியின் உடலில் திடீரென பல்வேறு மாற்றங்கள் ஏற்படுவது பெற்றோருக்கு தெரியவந்தது. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் மகளை வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.


திருவண்ணாமலை அருகே 10-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய 12-ம் வகுப்பு மாணவன் மீது போக்சோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 15 வயது மாணவி அதே பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதி பள்ளியில் 17 வயதான மாணவர் 12-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். உறவினர்களான இவர்கள் இருவரும் பழகி வந்துள்ளனர். இந்த பழக்கம் இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகரித்துள்ளது. 

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க;- ஆன்ட்டியின் அழகில் மயங்கிய இன்ஜினியர்.. நேரம் பார்த்து வீட்டில் புகுந்து பலாத்காரம்.. இறுதியில் நடந்த பயங்கரம்

இந்நிலையில், மாணவியின் உடலில் திடீரென பல்வேறு மாற்றங்கள் ஏற்படுவது பெற்றோருக்கு தெரியவந்தது. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் மகளை வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அந்த சிறுமியை மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் மாணவி 7 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. மகள் கர்ப்பமாக இருக்கும் செய்தியை கேட்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக மாணவியிடம் விசாரித்த போது நடந்தவற்றை கூறியுள்ளார். 

இதையும் படிங்க;-  கள்ளக்காதலால் பயங்கரம்.. கணவன், மாமியாரை துண்டு துண்டாக வெட்டி இளம்பெண்.. சிக்கிய எப்படி? பரபரப்பு தகவல்.!

இதனையடுத்து, வந்தவாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர்.  இந்த புகாரின் பேரில் 12-ம் வகுப்பு மாணவன் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்து அந்த மாணவனிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க;-  அம்மா லிஃப்ட் கொடுக்கிற சொல்லிட்டு.. காட்டுப்பகுதியில் வைத்து என்னை நாசம் பண்ணிட்டான்.. கதறிய சிறுமி.!

click me!