குமரியில் ஓரினசேர்க்கைக்காக வடமாநில இளைஞர் கடத்த முயற்சி; கத்தி, கூச்சலிட்டதால் தப்பி ஓட்டம்

By Velmurugan s  |  First Published Feb 21, 2023, 11:56 AM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரினச்சேர்க்கைக்காக வடமாநில இளைஞரை நபர் ஒருவர் கடத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தமிழகத்தில் உள்ள சர்வதேச சுற்றுலாத்தளமான கன்னியாகுமரி மாவட்டத்தில் உணவகம், விடுதி, கட்டுமானம் என பல்வேறு துறைகளிலும் ஆயிரக்கணக்கான வடமாநில இளைஞர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், இரவு நேரங்களில் நான்குவழிச் சாலையில் தனியாக நடந்து செல்லும் வடமாநில இளைஞர்களை குறி வைத்து கட்டாய ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுத்துவதாக புகார்கள் வந்தன.

இந்நிலையில், நேற்று இரவு கன்னியாகுமரி நான்கு வழிச்சாலை பகுதியில் தனியாக நடந்து வந்துகொண்டிருந்த வடமாநில இளைஞர் ஒருவரை சைகோ மனிதர் ஒருவர் வழிமறித்துள்ளார். பின்னர் அவரிடம் ஆசை வார்த்தைகளைக் கூறி ஓரினச்சேர்க்கைக்கு அழைத்துள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத வடமாநில இளைஞர் சைகோ மனிதரின் பேச்சைக் கேட்டு அதிர்ந்து போனார்.

Tap to resize

Latest Videos

undefined

மகாசிவராத்திரியில் கோபுரத்தின் உச்சியில் நடனமாடிய நாக பாம்பு; பக்தர்கள் பரவசம்

ஓரினச்சேர்க்கைக்கு வடமாநில இளைஞர் மறுப்பு தெரிவிக்கவே அவரை வலுக்கட்டாயமாக தனது இருசக்கர வாகனத்தில் ஏற்ற சைகோ மனிதர் முயன்றுள்ளார். இதனை அவ்வழியாக சென்ற மற்றொரு நபர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திமுக அமைச்சர்கள் சைகோபோல பேசுகின்றனர் - பிரேமலதா காட்டம்

click me!