கள்ளக்காதலால் பயங்கரம்.. கணவன், மாமியாரை துண்டு துண்டாக வெட்டி இளம்பெண்.. சிக்கிய எப்படி? பரபரப்பு தகவல்.!

By vinoth kumar  |  First Published Feb 21, 2023, 10:00 AM IST

அசாம் மாநிலம் கவுகாத்தியைச் சேர்ந்த அமர்ஜோதி என்பவருக்கும் வந்தனா கலிதா என்ற பெண்ணிற்கும் சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தனது கணவர் அமர்ஜோதி மற்றும் மாமியாரை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 


கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவர், மாமியாரை கொன்று உடல்களை துண்டு துண்டாக்கி பிரிட்ஜில் 3 நாட்கள் மறைத்து வைத்திருந்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர். 

டெல்லியில் அடுக்குமாடி குடியிருப்பில்  லிவிங் டுகெதர் பாணியில் வாழ்ந்தபோது நிக்கி யாதவ் திருமணம் செய்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்தியதால் ஆத்திரமடைந்தது அந்த பெண்ணை கொடூரமாக கொலை செய்து ஃப்ரீசரில் வைத்திருந்த தாபா உரிமையாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திருந்த நிலையில் தற்போது அசாமில் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. 

Tap to resize

Latest Videos

அசாம் மாநிலம் கவுகாத்தியைச் சேர்ந்த அமர்ஜோதி என்பவருக்கும் வந்தனா கலிதா என்ற பெண்ணிற்கும் சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தனது கணவர் அமர்ஜோதி மற்றும் மாமியாரை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

இதனிடையே, மருமகள் வந்தனாவின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து போலீசார் ரகசியமாக அவரை கண்காணித்து வந்தனர். இது தொடர்பாக வந்தனாவிடம் போலீசார் பாணியில் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது, பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது. விசாரணையில் தன் கணவரையும், மாமியாரையும் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். 

இதுதொடர்பாக போலீசார் கூறுகையில்;- அமர்ஜோதிக்கும், வந்தனாவுக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், தன்ஜீத் தேகா என்ற என்பவருடன் வந்தனாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதனால், கணவன் மனைவி இடையே சண்டை மேலும் முற்றியது.

மருமகளின் கள்ளக்காதலை அறிந்த மாமியார் கண்டித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த வந்தனா அரூப் தாஸ் என்பவர் உதவியுடன் மாமியாரை முதலில் கொலை செய்து உடலைத் துண்டு துண்டாக வெட்டி பிரிட்ஜில் வைத்துள்ளார். பின்னர், கள்ளக்காதலன் தன்ஜீத் தேகா உதவியுடன் கணவரைக் கொன்று அவரது உடலையும் துண்டு துண்டாக வெட்டியுள்ளார். பிறகு இருவரது உடல் பாகங்களையும் பாலித்தீன் பையில் கட்டி 3 நாட்கள் பிரிட்ஜில் வைத்துள்ளார். அதன் பிறகு கார் மூலம் மேகாலயாவுக்குச் சென்று மலை அடிவாரத்தில் இருவரின் உடல் பாகங்களை வீசியுள்ளனர். தற்போது, மாமியாரின் உடல் பாகங்கள் கிடைத்துள்ளன. அவரது கணவரின் உடல் பாகங்கள் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் 3 பேரை கைது செய்துள்ளனர். 

click me!