“நான் அவள் இல்லை” கதறி அழுத கணவன்.! கில்லாடி மனைவி - திருமணத்துக்கு பெண் பார்ப்பவர்களே உஷார்..!

By Raghupati R  |  First Published Feb 20, 2023, 8:39 PM IST

மேட்ரிமோனியல் செயலி மூலம் மனைவியைச் சந்தித்த மாப்பிளை ஒருவருக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார் மனைவி.


குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த விமல் கரியா என்பவர் மேட்ரிமோனியல் மூலம் தனக்கான துணையை தேடினார். அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரீட்டா தாஸ் என்பவரை நீண்ட தேடுதலுக்கு பிறகு தனது கனவுகன்னி என்று முடிவு செய்தார்.

மேட்ரிமோனியில் மூலம் ரீட்டா தாஸ் என்ற பெண்ணை சந்தித்து அவருடன் பேசினார். ரீட்டா தாஸ் விவாகரத்து செய்ததாக தனது சுயவிவரத்தில் குறிப்பிட்டுள்ளார். திருமணத்திற்கு முன்பே விவாகரத்து ஆவணங்களைப் பார்க்க வேண்டும் என்று விமல் கேட்டுக் கொண்ட போதிலும், ரீட்டா தனக்கு முன்பே ஒரு பஞ்சாயத்தில் திருமணம் செய்து கொண்டதாக கூறியிருக்கிறார்.

Tap to resize

Latest Videos

உண்மையான திருமணச் சான்றிதழ் இல்லை என்றும் கூறினார். விமல் அவளை நம்பி அகமதாபாத்தில் திருமணம் செய்து கொண்டார்கள். மேலும், திருமணத்திற்கு ஆறு மாதங்களுக்குப் பிறகு, ரீட்டா அசாமில் ஒரு நில விவகாரம் பிரச்னை தொடர்பாக செல்கிறேன் என்று கூறிவிட்டு காணாமல் போயுள்ளார். பிறகு அசாம் நீதிமன்றத்தால் மோசடி, திருட்டு, கொலை ஆகியவற்றில் குற்றம் சாட்டப்பட்டவர் தான் ரீட்டா என்றும், உண்மையில் தேடப்படும் குற்றவாளி என்றும் கண்டுபிடித்தார்.

இதையும் படிங்க..Trichy: துப்பாக்கிச் சூடு: எஸ்கேப் ஆன ரவுடிகளை சுட்டு பிடித்த போலீஸ்.! திருச்சியில் பரபரப்பு - என்ன நடந்தது?

மேலும், அதுமட்டுமில்லாமல், மனைவி பெயர் ரீட்டா தாஸ் இல்லை என்றும், ரேகா தாஸ் என்றும் கண்டுபிடித்தார். ஏற்கனவே கார் திருட்டுக்காக சிறையில் அடைக்கப்பட்ட அனில் சவுகானைத் தான் இன்னும் திருமணம் செய்து கொண்டதாக ஒப்புக்கொண்டார் ரேகா தாஸ்.

விமல் போர்பந்தர் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தார். பிறகு திருமணத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற அவரது கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. ஆன்லைன் மேட்ரிமோனியல் மூலம் வரன் தேடுபவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை இது எடுத்துக்காட்டுகிறது.

இதையும் படிங்க..குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கிறேன்!.. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்ட புகைப்படம் - உருகிய ரசிகர்கள்!

click me!