ஓடும் ஆட்டோவில் இளம்பெண்ணுக்கு கண்ட இடத்தில் கை வைத்து பாலியல் தொல்லை! அலறிய பெண்! இறுதியில் நடந்தது என்ன?

Published : Sep 01, 2022, 01:41 PM IST
ஓடும் ஆட்டோவில் இளம்பெண்ணுக்கு கண்ட இடத்தில் கை வைத்து பாலியல் தொல்லை! அலறிய பெண்! இறுதியில் நடந்தது என்ன?

சுருக்கம்

ஈரோட்டை சேர்ந்த 22 வயது இளம்பெண் செல்வபுரத்தில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த 28ம் தேதி வேலை விஷயமாக அவர் திருப்பூர் சென்றார். அங்கு வேலை முடிந்து நள்ளிரவு 12.30 மணியளவில் கோவை ஹோப்ஸ் சந்திப்பிற்கு பேருந்தில் வந்து இறங்கினார். 

கோவையில் நள்ளிரவில் ஆட்டோவில் வந்த இளம்பெண்ணுக்கு கண்ட இடத்தில் கை வைத்து பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோட்டை சேர்ந்த 22 வயது இளம்பெண் செல்வபுரத்தில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த 28ம் தேதி வேலை விஷயமாக அவர் திருப்பூர் சென்றார். அங்கு வேலை முடிந்து நள்ளிரவு 12.30 மணியளவில் கோவை ஹோப்ஸ் சந்திப்பிற்கு பேருந்தில் வந்து இறங்கினார். 

அங்கிருந்து செல்வபுரத்துக்கு பேருந்து இல்லை என்பதால் ஆன்லைன் மூலமாக ஆட்டோ புக்கிங் செய்து பயணித்துள்ளார். நள்ளிரவு நேரம் என்பதால் அவினாசி சாலையில் ஆட்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. அப்போது ஆட்டோ டிரைவர் இளம்பெண்ணுக்கு கண்ட இடத்தில் கை வைத்து பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் அலறி கூச்சல் போட்டு ஆட்டோவை நிறுத்துமாறு கூறினார். இதனையடுத்து, ஓடும் ஆட்டோவில் இருந்து இளம்பெண் கீழே குதித்தார்.

இதில் அவருடைய முதுகு, தலை மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டது. பின்னர் தோழிக்கு போன் செய்து வரவழைத்து ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற்று வந்தார். இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் கோவை உக்கடத்தை சேர்ந்த முகமது சாதிக் (43) என்பரை போலீசார் கைது செய்தனர்.

PREV
click me!

Recommended Stories

அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஸ்ரேயா! கதறியும் விடாத தந்தை, மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!
திருமணமான பெண்ணுடன் பழகுவதை நிறுத்திடு! கண்டித்த வேல்குமார்! நடுரோட்டில் கதறவிட்ட அதிர்ச்சி!