மதுபோதையில் கர்ப்பிணியை தாக்கிய கணவர்… திருவொற்றியூர் மருத்துவமனையில் பரபரப்பு!!

Published : Aug 31, 2022, 05:39 PM IST
மதுபோதையில் கர்ப்பிணியை தாக்கிய கணவர்… திருவொற்றியூர் மருத்துவமனையில் பரபரப்பு!!

சுருக்கம்

சென்னை திருவொற்றியூரில் 7 மாதக் கர்ப்பிணியை அவரது கணவர் மருத்துவமனையில் வைத்து தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருவொற்றியூரில் 7 மாதக் கர்ப்பிணியை அவரது கணவர் மருத்துவமனையில் வைத்து தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை எர்ணாவூர் சுனாமி குடியிருப்பில் வசித்து வருபவர் மனோஜ் குமார். இவரது மனைவி சாவித்திரி 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்த நிலையில் சாவித்திரி மருத்துவ பரிசோதனைக்காக திருவொற்றியூரில் உள்ள மாநகராட்சி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள ஸ்கேன் மையத்திற்கு இன்று காலை சென்றுள்ளார்.

இதையும் படிங்க: நள்ளிரவில் கர்ப்பிணி பசுவை கொடூரமாக பாலியல் வன்புணர்வு செய்த சைகோ.. கொடுமை தாங்க முடியாமல் உயிரிழந்த பசு.

அங்கு கூட்டம் அதிகமாக இருந்ததால் மதியம் 3 மணி வரை அவர் அங்கேயே காத்திருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே மதுபோதையில் வீட்டிற்கு வந்த மனோஜ் குமார் நீண்ட நேரம் ஆகியும் மனைவி வராததால் ஆத்திரமடைந்தார். இதை அடுத்து மருத்துவமனைக்கு சென்ற மனோஜ் குமார், அங்கிருந்த அவரது மனைவியை கர்ப்பிணி என்று கூட பாராமல் அங்கிருந்தவர்கள் முன்னிலையில் தாக்கியுள்ளார்.

இதையும் படிங்க: கணவரை கொலை செய்த பெண்ணுக்கு தூக்கு… நாற்காலியை எட்டி உதைத்து தண்டனையை நிறைவேற்றிய மகள்!!

இதை அடுத்து அங்கிருந்த மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் தடுக்க முற்பட்டபோது ஆபாசமான வார்த்தைகளில் அவர் திட்டியதாக கூறப்படுகிறது. பின்னர் தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த போலீசார் அவரை தடுக்க முற்பட்ட போது போலீஸாரிடமும் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவத்தை மருத்துவமனையில் இருந்தவர்கள் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!