சார் நான் உங்க ஸ்டுடென்ட் என்ன விட்டுடுங்க.. ஓயாமல் பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் நிலைமையை பார்த்தீங்களா?

By vinoth kumar  |  First Published Jul 4, 2022, 8:47 AM IST

பிளஸ்-2 பயிலும் மாணவி ஒருவருக்கு பள்ளியின் விலங்கியல் பாட ஆசிரியர் அழகர், அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது. 


மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக எழுந்த புகாரையடுத்து ஏரல் அரசு மேல்நிலைப்பள்ளி விலங்கியல் ஆசிரியரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். 

தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் தற்போது பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், சிறுத்தொண்டநல்லூரில் உள்ள பள்ளியில் மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், பிளஸ்-2 பயிலும் மாணவி ஒருவருக்கு பள்ளியின் விலங்கியல் பாட ஆசிரியர் அழகர், அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது. 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- பாவாடையுடன் குளித்து கொண்டிருந்த 57 வயது பெண்ணை கரைக்கு தூக்கி சென்று இளைஞர் செய்த காரியம்..!

இதையும் படிங்க;-  வரதட்சணை வேணும்..மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கொடூர கணவன் - வெளியான வீடியோ !

இதுதொடர்பாக மாணவியின் பெற்றோர் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி தலைமையிலான குழுவினர் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீதான புகார் குறித்து பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையின் அடிப்படையில் ஆசிரியர் அழகரை பணி இடைநீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி உத்தரவிட்டார். 

இதையும் படிங்க;- கடைக்குள் கள்ள உறவு..பல்வேறு பெண்களுடன் உடலுறவு..கையும் களவுமாக மாட்டிக்கொண்ட மன்மதன் !

click me!