கடைக்குள் கள்ள உறவு..பல்வேறு பெண்களுடன் உடலுறவு..கையும் களவுமாக மாட்டிக்கொண்ட மன்மதன் !

தேனி- மதுரை நெடுஞ்சாலையில் பங்களாமேடு பகுதியில் தமிழகத்தின் பிரபல தனியார் ஜவுளிக் கடை அமைந்துள்ளது. இந்தக் கடைக்கு தென்காசி, வத்தலகுண்டு, கோவை உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கிளைகள் உள்ளன. 

The man who cheated on various women and had sex was caught at famous silk show room

இந்த ஜவுளிக்கடையின் தேனியில் உள்ள கிளையை தென்காசியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரது மகன் (31) முருகன் நடத்தி வருகிறார். இந்தக் கடையில் அழகு சாதனப் பொருட்கள் விற்பனையகம் மற்றும் சூப்பர் மார்க்கெட் உள்ளிட்டவைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கடைக்குள் அமைந்துள்ள அழகு சாதனப் பொருட்கள் விற்பனையகத்தை பெரியகுளம் அருகே உள்ள காமக்காபட்டியைச் சேர்ந்த கனகா (29) என்பவர் நடத்தி வருகிறார். அந்த வகையில் கடை உரிமையாளரான முருகனுக்கும் கனகாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

The man who cheated on various women and had sex was caught at famous silk show room

வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் கனகாவைத் திருமணம் செய்து கொள்வதாக முருகன் வாக்குறுதி அளித்ததைத் தொடர்ந்து கனகாவும், முருகனும் கடைக்குள் உள்ள ஒரு அறையிலும்,முருகன் தங்கியுள்ள பாரஸ்ட் ரோடு பகுதியில் உள்ள வீட்டிலும் பல முறை உடல் உறவு கொண்டுள்ளனர். இவர்களது காதலுக்கு ஜவுளிக்கடையில் மேனேஜராக பணிபுரியும் கேரளாவைச் சேர்ந்த வினோத் என்பவரும் உதவியுள்ளார். 

வினோத் ஜவுளிக் கடையில் உள்ள சமயங்களில் கனகாவும், முருகனும் பழனிசெட்டிபட்டியில் உள்ள வினோத்தின் வீட்டிற்கு அடிக்கடி சென்று அங்கும் உடலுறவில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் கடந்த மார்ச் முதல் வாரத்தில் முருகனுக்கும் சின்னமனூரைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரின் மகளுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இந்த விவகாரத்தை மறைத்து மறுநாளும் முருகன், கனகாவுடன் பழனிசெட்டிபட்டியிலுள்ள மேனேஜர் வினோத்தின் வீட்டில் உடலுறவு கொண்டுள்ளார். 

அந்த சமயத்தில் கனகாவிற்கு போன் செய்த கனகாவின் உறவினர் வினோத்திற்கு நடைபெற்ற நிச்சயதார்த்தம் பற்றி தகவல் கூறியுள்ளார். மேலும் வினோத் நிச்சயதார்த்தம் தொடர்பான படத்தையும் கனகாவின் செல்போனிற்கு அனுப்பியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கனகா முருகனுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். உடனடியாக முருகன் மேனேஜர் வினோத்தை வீட்டுக்கு வரவழைத்துள்ளார். அங்கு வினோத், முருகன் கனகா இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின் படி வினோத்தின் முன்னிலையில், உத்தமபாளையம் ஞானம்மன் கோவிலில் முருகன் கனகா கழுத்தில் தாலி கட்டியுள்ளார். 

The man who cheated on various women and had sex was caught at famous silk show room

இதற்கான ஏற்பாடுகளை மேனேஜர் வினோத் செய்துள்ளார். திருமணம் நடைபெற்ற மறுநாள் கனகாவிற்கு போன் செய்த முருகன், நான் தொழிலதிபரின் பெண்ணை பல ஆண்டுகளாக உயிருக்கு உயிராக காதலித்து வருகிறேன். தான் அவளைதான் திருமணம் செய்து கொள்வேன் என்றும், உன்னுடன் நடைபெற்ற திருமணத்திற்கு எந்த ஆதாரமும் இல்லை திருமணம் செல்லாது. திருமணத்திற்குப் பின் நான் அமெரிக்காவில் செட்டில் ஆகப் போகிறேன் என்று கூறிவிட்டு மொபைல் போனை சுவிட்ச் ஆப் செய்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த கனகா தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முருகன் மீது புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய காவல்துறையினர் முருகன் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதை அறிந்த முருகன் தலைமறைவானார். காவல்துறையினர் முருகனை தீவிரமாக தேடிவந்த நிலையில், முருகன் நேற்று மாலை காவல்துறையினரிடம் சரணடைந்தார். 

இதனையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். காதலித்த பெண்ணுடன் பல மாதங்களாக உல்லாசமாக இருந்துவிட்டு, வேறொரு பெண்ணுடன் நிச்சயம் செய்து, மறுநாள் காதலித்த பெண்ணையே திருமணம் செய்வதாக தாலிகட்டி நாடாகமாடிய முருகன் ஒரே நேரத்தில் இரு பெண்கள் வாழ்க்கையில் விளையாட நினைத்ததால் தற்போது சிறைக்குச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : நேற்று ஸ்டாலின்..இன்று அண்ணாமலை.! அமித்ஷாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அண்ணாமலை !

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios