ஸ்கூல் வாத்தியார் செய்ற வேலையா இது.. பள்ளி மாணவிக்கு ஆபாச படம் அனுப்பி என்ன செய்தார் தெரியுமா?

By vinoth kumar  |  First Published Jul 23, 2024, 3:21 PM IST

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அடுத்துள்ள சடையம்பட்டியைச் சேர்ந்த தங்கபாண்டியன்(37). இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளது. இவர் பனையடிப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். 


சாத்தூர் அருகே பள்ளி மாணவிக்கு ஆபாச படங்களை அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அடுத்துள்ள சடையம்பட்டியைச் சேர்ந்த தங்கபாண்டியன்(37). இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளது. இவர் பனையடிப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். அதே பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வரும் 13 வயது மாணவியிடம் பழகி வந்துள்ளார். அந்த மாணவியிடம் செல்போன் இல்லாததால் அவரது தாய் செல்போன் நம்பரை வாங்கினார். 

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! சைலண்டாக கைது செய்யப்பட்ட சம்போ செந்தில்? எங்கு? எப்போது? அடுத்து சிக்கப்போவது யார்?

அந்த செல்போனுக்கு அடிக்கடி தங்கப்பாண்டியன் ஆபாச படங்கள், வீடியோக்களை அனுப்பி உள்ளார். இதனை வெளியே சொல்லக்கூடாது என மிரட்டி அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் உறவினர் ஒருவர் அந்த பள்ளி மாணவியின் செல்போனை வாங்கி பார்த்த போது அதில் நிறைய ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். 

இதையும் படிங்க:  அய்யோ போலீஸ் கஸ்டடியா! வேண்டவே வேண்டாம்! நீதிபதியிடம் கதறிய ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகள்! என்ன காரணம் தெரியுமா?

இதுகுறித்து மாணவியிடம் விசாரித்தபோது ஆசிரியர் தங்கப்பாண்டியன் நீண்ட நாட்களாக ஆபாச வீடியோ மற்றும் ஆபாச படங்களை அனுப்பி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறினார்.  இதையடுத்து மாணவியின் தந்தை சாத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் தங்கப்பாண்டியன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பள்ளி ஆசிரியரே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

click me!