Illegal Love Murder:காணாமல் போன ரீஜா! பிரமோத் வீட்டுக்கு சென்ற போலீசார்! காத்திருந்த அதிர்ச்சி! நடந்தது என்ன?

Published : Jul 21, 2024, 08:13 AM ISTUpdated : Jul 21, 2024, 12:18 PM IST
Illegal Love Murder:காணாமல் போன ரீஜா! பிரமோத் வீட்டுக்கு சென்ற போலீசார்! காத்திருந்த அதிர்ச்சி! நடந்தது என்ன?

சுருக்கம்

 கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த ரீஜாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த பிரமோத் (35)  என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. 

கள்ளக்காதலியை வெட்டி கொலை செய்துவிட்டு காதலன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள காட்டாக்கடை பாலைக்கல் பகுதியை சேர்ந்தவர் ரீஜா (45). கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் தனியாக வசித்து வந்த ரீஜாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த  பிரமோத் (35)  என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனையடுத்து பிரமோத்தின் வீட்டுக்கு ரீஜா அடிக்கடி சென்று வந்துள்ளார்.

இதையும் படிங்க: அடப்பாவி! அக்காவை நிச்சயம் பண்ணிட்டு! மச்சினிச்சியை கடத்தி சென்று பலாத்காரம் செய்த கொடூரன்!

இந்நிலையில் நேற்று முன்தினம் வெளியே சென்ற ரீஜா நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனையடுத்து உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். சந்தேகத்தின் பேரில் பிரமோத்தின் வீட்டுக்கு சென்ற போது போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 

இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. பின்னணியில் இருப்பது யார்? போலீஸ் எடுத்த அதிரடி முடிவு!

காணாமல்போன ரீஜா அந்த வீட்டுக்குள் வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். வீட்டின் உள்ளே சென்று சோதனை செய்த போது பிரமோத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. இதனையடுத்து இருவரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக  திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் ரீஜாவை வெட்டி கொலை செய்துவிட்டு பிரமோத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர்.

PREV
click me!

Recommended Stories

புதிய வகை ஆன்லைன் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் முதல் AI வாய்ஸ் வரை - தப்பிப்பது எப்படி?
காதல் கல்யாணம் பண்ண மூன்றே மாசத்துல என் பொண்ண கொன்னுட்டாங்களே! நெஞ்சில் அடித்து கதறும் தாய்