இந்த வயசுல உனக்கு தேவையா.. சிகிச்சை வந்த இளம்பெண்ணிடம் அந்த இடத்தில் கை வைத்து 71 வயது டாக்டர் பாலியல் சீண்டல்

Published : Oct 06, 2022, 12:15 PM ISTUpdated : Oct 06, 2022, 12:16 PM IST
இந்த வயசுல உனக்கு தேவையா.. சிகிச்சை வந்த இளம்பெண்ணிடம் அந்த இடத்தில் கை வைத்து 71 வயது டாக்டர் பாலியல் சீண்டல்

சுருக்கம்

ராமநாதபுரம் சேதுபதி நகரு் 2வது தெருவை சேர்ந்தவர் ஜபருல்லா கான் (71). மருத்துவரான இவர், பாரதி நகரில் கிளினிக் நடத்தி வருகிறார். இவரது கிளினிக்கிற்கு சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் தினமும் சிகிச்சைக்கு வந்து செல்வது வழக்கம்.

சிகிச்சைக்கு வந்த இளம் பெண்ணிடம் பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் பேரில் 71 வயது மருத்துவர் அதிரடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

ராமநாதபுரம் சேதுபதி நகரு் 2வது தெருவை சேர்ந்தவர் ஜபருல்லா கான் (71). மருத்துவரான இவர், பாரதி நகரில் கிளினிக் நடத்தி வருகிறார். இவரது கிளினிக்கிற்கு சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் தினமும் சிகிச்சைக்கு வந்து செல்வது வழக்கம். இந்நிலையில், கடந்த 2ம் தேதி உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் 19 வயது இளம்பெண் ஜபருல்லா கானிடம் சிகிச்சைக்காக வந்துள்ளார். 

பரிசோதனை செய்வது போல மருத்துவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால்,  மன உளைச்சல் ஆளான பெண் ராமநாதபுரம் மகளிர் போலீசில் அப்பெண் புகார் அளித்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் இளம்பெண்ணுக்கு  மருத்துதவர் ஜபருல்லா கான் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. 

இதைத்தொடர்ந்து ஜபருல்லா கான் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.  இதையடுத்து தனக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறிய ஜபருல்லா கான், சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

PREV
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!