வேலை தேடும் பெண்கள் தான் டார்கெட்; சென்னையில் விபசார கும்பல் அதிரடி கைது

By Dinesh TG  |  First Published Oct 5, 2022, 7:20 PM IST

சென்னைக்கு வேலை தேடி வரும் பெண்களை குறி வைத்து அவர்களை அடைத்து வைத்து விபசாரத்தில் ஈடுபடுத்தி வந்த ஐந்து நபர்களை காவல் துறையினர் அதிரடியாக கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
 


தமிழகம், ஆந்திரா, பெங்களூரு உள்ளிட்டப் பகுதிகளில் இருந்து சென்னைக்கு வேலை தேடி வரும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்த பெண்களை குறி வைத்து மோசடி நடைபெறுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி வேலை தேடி வரும் பெண்களிடம் தனியார் நிறுவனங்களில் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைகளைக் கூறி அவர்களை நம்ப வைக்கின்றனர்.

பணியில் மெத்தனம்? தூக்கி அடிச்சிருவோம் பாத்துக்கோங்க - அமைச்ர் துரைமுருகன் ஆவேசம்

Tap to resize

Latest Videos

சிறிது காலம் வேலை தேடுவது போல நடித்துவிட்டு வேலை கிடைக்கும் வரை தற்காலிகமாக விபசாரத்தில் ஈடுபட்டு நல்ல வருமானம் ஈட்டலாம் என்று கூறி கட்டாயப்படுத்தி பெண்களை விசாரத்தில் ஈடுபடுத்துவதை காவல் துறையினர் உறுதி செய்தனர். இதனைத் தொடர்ந்து சாலிகிராமம் சாந்தி காலனி தில்லையாடி வள்ளியம்மை தெருவில் உள்ள ஒரு வீட்டை விருகம்பாக்கம் காவல் துறையினர்  ரகசியமாக நோட்டமிட்டனர். அப்போது அந்த வீட்டில் பெண்  ஒருவரை அடைத்து வைத்து விபசாரத்தில் ஈடுபடுத்தியதை காவல் துறையினர் உறுதிப்படுத்தினர்.

திருச்சியில் நள்ளிரவில் மண்டை ஓடுகளுடன் நவராத்திரி கொண்டாடிய அகோரிகள்

இதனைத் தொடர்ந்து வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக மதுரையைச் சேர்ந்த கார்த்திகேயன், நெல்சன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் பாலியல் தொழில் ஈடுபடுத்தப்பட்ட பெண் மீட்கப்பட்டார். 

தொடர்ந்து அவர்களிடம் இருந்து செல்போன்கள், இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதே போன்று திருவேங்கடசாமி தெருவில் உள்ள வீட்டிலும் விசாரம் நடப்பதை உறுதி செய்த காவல் துறையினர் அப்பகுதியைச் சேர்ந்த சாந்தி, தேவி, சீதாதேவி ஆகிய 3 பெண்களை கைது செய்தனர்.

 

click me!