12 ஆம் வகுப்பு மாணவியை கொடூரமாக கழுத்தை அறித்து கொன்ற வழக்கு.. ஆயுள் தண்டனையை உறுதி செய்த கோர்ட்.

By Ezhilarasan BabuFirst Published Oct 5, 2022, 5:54 PM IST
Highlights

காதலிக்க சம்மதம் தெரிவிக்காததால் பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை மிகக் கொடூரமாக  கழுத்தை அறுத்து கொலை செய்த வழக்கில் வாலிபருக்கு வழங்கப்பட்ட  ஆயுள் தண்டனையை குறைக்க முடியாது என மறுத்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்,  அந்த ஆயுள் தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தது. 

காதலிக்க சம்மதம் தெரிவிக்காததால் பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை மிகக் கொடூரமாக  கழுத்தை அறுத்து கொலை செய்த வழக்கில் வாலிபருக்கு வழங்கப்பட்ட  ஆயுள் தண்டனையை குறைக்க முடியாது என மறுத்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்,  அந்த ஆயுள் தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் திருவள்ளூர். மகளிர் சிறப்பு நீதிமன்றம்  ஏற்கனவே ஆயுள் தண்டனையுடன் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ள நிலையில் அதை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

இதையும் படியுங்கள் : பெண் காவலரை திருமணம் செய்து கொண்ட SI.. கர்பமாக மனைவியை வயிற்றில் எட்டி உதைத்து கொடூரம்..

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  ஆறு மாத குழந்தை முதல் 60  வயதை கடந்த மூதாட்டிகள் வரையிலும் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுகின்றனர். இதே நேரத்தில் காதலிக்க மறுக்கும் பெண்கள் முகத்தில் ஆசிட் வீசுவது, காதலிப்பதுபோல் நடித்து உல்லாசம் அனுபவிப்பது. திருமணம் செய்துகொண்டு வரதட்சணை கேட்டு கொடுமை செய்வது போன்ற எண்ணற்ற கொடுமைகள் பெண்களுக்கு எதிராக அரங்கேறி வருகிறது. இந்த வரிசையில் காதலிக்க  சம்மதிக்காத நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ள சம்பவம் அரங்கேறியது. அதில் குற்றத்தில் ஈடுப்ட்ட இளைஞனின் ஆயுள் தண்டனையை நீதிமன்றம் உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது.

இதையும் படியுங்கள் :  திருவெறும்பூரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த பால்கடைக்காரர்

முழு விவரம் பின்வருமாறு:- திருவள்ளுவர் மாவட்டம் மணலி புது நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன். இவர் அதே பகுதியை சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை கடந்த 2014ஆம் ஆண்டு  ஒரு தலையாக காதலித்து வந்தார். மாணவியின் பெற்றோர்கள் தெரிந்தவர்கள் என்பதால் அதேஆண்டு மார்ச் 16 ஆம் தேதி மாணவியின் வீட்டுக்கு சென்ற ஜெயராமன் மாணவியை தனக்குத் திருமணம் செய்து வைக்கும்படி கோரினார். ஆனால் மாணவியின் பெற்றோர்கள் அதற்கு மறுப்புத் தெரிவித்ததுடன் படிப்பு முடிந்த பின்னர் அது குறித்து பேசிக் கொள்ளலாம் என கூறினார்.

இதனால் ஆத்திரமடைந்த ஜெயராமன் மாணவியின் கழுத்தில் கத்தியால் குத்தியதுடன், கழுத்தை கொடூரமாக அறுத்து கொலை செய்தார். இது தொடர்பான  போலீசார் வழக்கு பதிவு செய்ததுடன் ஜெயராமனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இது தொடர்பான வழக்கு திருவள்ளூர் மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அதில்  பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை கொடூரமாக கொலை செய்த வாலிபர் ஜெயராமனுக்கு ஆயுள் தண்டனையும் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தது. இந்நிலையில் அந்த தண்டனையை ரத்து செய்யக்கோரி வாலிபர் ஜெயராமன் சென்னை  உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

மனு நீதிபதிகள் என் பிரகாஷ் மற்றும் டிக்கா ராமன் அமர்வு  முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது உடனடியாக திருமணம் செய்து வைக்காததால் இருவரும் தற்கொலைக்கு முயற்சித்ததாக ஜெயராமன் தரப்பில் வாதிடப்பட்டது. அப்போது மாணவியின் உடலில் இருந்த 32 இடங்களில் இருந்த காயங்களை சுட்டிக்காட்டி இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், ஜெயராமனுக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனை ரத்து செய்ய எந்த முகாந்திரமும் இல்லை என கூறியதுடன், ஜெயராமன் மனுவை தள்ளுபடி செய்ததுடன், அவருக்கான ஆயுள் தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தனர். 
 

click me!