மனைவி அனுப்பிய விவாகரத்து நோட்டீஸ்.. மனமுடைந்த லோகேஷ்..தற்கொலைக்கான காரணத்தை கூறி கதறிய தந்தை.

By Ezhilarasan BabuFirst Published Oct 5, 2022, 2:17 PM IST
Highlights

மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் மனைவி விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியதால்தான் தன்  மகன் தற்கொலை செய்து கொண்டதாக நடிகர் லோகேஷ் தந்தை ராஜேந்திரன் கூறியுள்ளார்.

மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் மனைவி விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியதால்தான் தன் மகன் தற்கொலை செய்து கொண்டதாக நடிகர் லோகேஷ் தந்தை ராஜேந்திரன் கூறியுள்ளார்.

மர்மதேசம், ஜீபூம்பா உள்ளிட்ட பிரபல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர் லோகேஷ். இவர் திரைப்படங்களை இயக்குவதில் ஆர்வம் மிகுதியால் அது தொடர்பான பணிகளில் ஈடுபட்டு வந்ததுடன், பல குறும்படங்களையும் இயக்கி வந்தார். கடந்த அக்டோபர் 2ஆம் தேதி கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மயங்கிய நிலையில் கிடந்த லோகேஷை மீட்டு அங்குள்ள 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே விஷம் அருந்தி  தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு இருப்பது தெரிந்தது.அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையும் படியுங்கள்:   திருவெறும்பூரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த பால்கடைக்காரர்

இதுதொடர்பாக அவரது தந்தை ராஜேந்திரன் கூறுகையில் கடந்த 2011ஆம் ஆண்டு அனிஷா என்ற பெண்ணை லோகேஷ் காதலித்து திருமணம் செய்துகொண்டார், அவர் மனைவியுடன் மாடம்பாக்கத்தில் வசித்து வந்தார். நான் வில்லிவாக்கத்தில் வசித்து வந்தேன், திருமணத்திற்குப் பின்னர் என்னுடனான தொடர்பை லோகேஷ்  துண்டித்துக் கொண்ட நிலையில், இதுவரை அவரை இருமுறை மட்டுமே சந்தித்துள்ளேன். இறுதியாக கடந்த சனிக்கிழமை என்னை சந்திக்க வந்த லோகேஷ் என்னிடம் பணம் வேண்டும் எனக் கேட்டுப் பெற்றுச் சென்றார்.

இதையும் படியுங்கள்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 இந்தியர்கள் கடத்தல்… கலிபோர்னியாவில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்!!

ஆனால் அவர் எங்கு சென்றார் என்பது குறித்து எனக்கு தெரியாது, மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மற்றும் குடும்பப் பிரச்சினைகள் குறித்து எங்களுக்கு எதும் தெரியாது, அதாவது அவரது மனைவி விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய பிறகு கடந்த ஆறு மாதமாக இருவரும் பிரிந்து வாழ்வதாக தெரிந்தது. கடந்த திங்கட்கிழமை போலீசார் தகவல் தெரிவித்த பிறகுதான்  லோகேஷ் தற்கொலை முயற்சி மேற்கொண்டு மருத்துமனையில் இருப்பது எனக்கு தெரிந்தது. என் மகன் சிறந்த நடிகன், மர்ம தேசம் மூலம் இந்தியாவில் பிரபலமாகி தெலுங்கிலும் சிறந்த குழந்தை நட்சத்திரங்களாக விருதைப் பெற்றவர்.

எம்ஆர் ராதா அவர்களின் தம்பி மகன் நான், ஆனால் மிகப்பெரும் நடிகரின் பரம்பரையைச் சேர்ந்தவன் என்றில்லாமல் சொந்த  முயற்சியில் எனது மகனை நடிப்பில் முன்னேற வைத்தேன்,பிரேதபரிசோதனை முடிந்தவுடன் எனது வீட்டிற்கு கொண்டு செல்ல உள்ளேன். அவரது மனைவி அனுஷா நேற்று வெறும் பார்வையாளர்கள் போல வந்து பார்த்து விட்டு சென்று விட்டார். உடல்  தங்களுக்கு வேண்டாம் என தடையில்லா சான்று எழுதிக் கொடுத்துவிட்டுப் போய்விட்டார். இவ்வாறு அவரது தந்தை ராஜேந்திரன் வேதனையுடன் கூறினார்.  
 

click me!