பல பெண்களுடன் உல்லாசமாக இருந்த காதல் மன்னன்.. காதலியின் உறவினர்களிடம் வசமாக சிக்கிய சம்பவம்

Published : Oct 04, 2022, 10:21 PM ISTUpdated : Oct 04, 2022, 10:24 PM IST
பல பெண்களுடன் உல்லாசமாக இருந்த காதல் மன்னன்.. காதலியின் உறவினர்களிடம் வசமாக சிக்கிய சம்பவம்

சுருக்கம்

பல்வேறு பெண்களுடன் உல்லாசமாக இருந்த நபரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கும்பகோணம், நாகேஸ்வரன் வடக்கு வீதியை சேர்ந்தவர் ஸ்வேதா. இவருக்கு வயது 22 ஆகிறது. தாய் தந்தை இல்லாமல் தனது அத்தை, மாமா பாதுகாப்பில் வளர்ந்து வருகிறார். மேலக்காவேரியில் உள்ள சாமியான பந்தல் காண்டிராக்டரிடம், வேலை பார்த்து வருகிறார் ஸ்வேதா.

இந்த நிலையில் துக்காம்பாளையம் தெருவை சேர்ந்த 27 வயதான தியாகராஜன் என்பவர் ஸ்வேதா வேலை செய்யும் இடத்துக்கு அடிக்கடி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் நாளடைவில் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறி உள்ளது. கடந்த நான்கு வருடமாக அவர்கள் காதலித்து வந்துள்ளனர்.

இதையும் படிங்க..ஓபிஎஸ் மகனுக்கு மந்திரி பதவி.. ஓபிஎஸ்சுக்கு இணைப் பொதுச்செயலாளர் பதவி - உண்மையை உடைத்த தங்கமணி !

இதில் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.  இந்நிலையில், தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு ஸ்வேதா தியாகராஜனிடம் வற்புறுத்தியுள்ளார். ஆனால் தியாகராஜன் ஸ்வேதாவை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி வந்தார். இந்நிலையில், ஸ்வேதா தனியாக வீட்டில் இருப்பதை அறிந்த தியாகராஜன் அவரை தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருக்க முயன்றார்.

இதற்கு இணங்காத ஸ்வேதா, தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி காலில் விழுந்து கெஞ்சினார். அப்போது வீட்டிற்குள் புகுந்த ஸ்வேதாவின் அத்தை, மாமா மற்றும் உறவினர்கள், தியாகராஜனை அடித்து உதைத்து பாதிக்கப்பட்ட பெண்ணுடன் திருமணம் செய்து வைத்தனர். பின்னர் மகளிர் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்துள்ளனர்.

அப்போது, தியாகராஜன் பல பெண்களை காதல் வலையில் விழ வைத்து உல்லாசமாக இருந்துவிட்டு, வீடியோ போட்டோக்களை வைத்து மிரட்டி வந்துள்ளது தெரியவந்தது.  அதேபோன்று ஸ்வேதாவையும் மிரட்டியது தெரியவந்தது குறிப்பிடத்தக்கது. இந்த அப்பகுதியில் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க..சிறையில் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்ட சவுக்கு சங்கர்.. பின்னணியில் நடந்தது என்ன ?

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஏண்டா.. எங்க ஊருக்கே வந்து பொண்ண இப்படி செய்வீங்களா? வாலிபர்களை சுத்துப்போட்ட கிராம மக்கள்! இறுதியில் நடந்த அதிர்ச்சி
தனியாக இருந்த மாணவியை மிரட்டி ஆபாச வீடியோ பதிவு.. மக்கள் போராட்டத்தால் ம.பி.யில் பதற்றம்!