திருவெறும்பூரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த பால்கடைக்காரர்

By Dinesh TG  |  First Published Oct 5, 2022, 11:46 AM IST

திருவெறும்பூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பால்கடைக்காரர் மீது அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
 


திருவெறும்பூர் பகுதியை சேர்ந்த 6ம் வகுப்பு படிக்கும் மாணவி அந்த பகுதியில் உள்ள பால் கடைக்கு சென்றுள்ளார். அப்போது போது பால் கடை உரிமையாளர் எழிலன் என்பவர் அந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.

தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை.. 15 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை.. வானிலை அப்டேட்

Tap to resize

Latest Videos

பால்கடைக்காரர் தன்னிடம் நடந்துகொண்ட விதம் குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளர். இதனைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடை உரிமையாளர் எழிலன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் புகார் அளித்தனர்.

நாட்டு துப்பாக்கியோடு மான் வேட்டைக்கு சென்றவர்கள் சிசிடிவியால் சிக்கிய சம்பவம்.. அப்பறம் என்னாச்சு..?

புகாரின் அடிப்படையில் திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தலை மறைவாக உள்ள எழிலனை தேடி வருகின்றனர்.

 

click me!