வயிற்று வலியை போக்குவதாக கூறி சிறுமி வயிற்றில் பிள்ளையை கொடுத்த 65வயது பூசாரி கிழவன்.. அலேக்கா தூக்கிய போலீஸ்

Published : Jun 10, 2022, 09:46 AM ISTUpdated : Jun 10, 2022, 09:48 AM IST
வயிற்று வலியை போக்குவதாக கூறி சிறுமி வயிற்றில் பிள்ளையை கொடுத்த 65வயது பூசாரி கிழவன்.. அலேக்கா தூக்கிய போலீஸ்

சுருக்கம்

நம்பிய சிறுமியின் தாயும் அந்த சிறுமியை பூசாரி பழனியின் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது சிறுமியின் தாயாரை வீட்டின் வெளியே அமர வைத்த பூசாரி பழனி தனி அறைக்கு அழைத்து சென்று சிறுமியின் வயிற்று வலியை போக்க சிறப்பு பூஜைகள் செய்வதாக கூறியுள்ளார். ஆனால், சம்பவத்தன்று அந்த சிறுமியை பூசாரி பழனி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

புதுக்கோட்டை அருகே சிறுமியின் வயிற்று வலியை சிறப்பு பூஜை மூலம் குணப்படுத்துவதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்த பூசாரி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமிக்கு வயிற்று வலி பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதனையறிந்த அதே பகுதியில் உள்ள ஊராளி கருப்பர் கோயிலில் பூசாரியாக இருக்கும் முதியவர் பழனி (65) சிறுமியின் தாயாரை அணுகி தான் சிறப்பு பூஜை மூலம் அந்த சிறுமியின் வயிற்றில் வலியை குணப்படுத்துவதாக கூறியுள்ளார். 

இதையும் படிங்க;- 17 வயது சிறுமியை 7 ஆண்டாக பலாத்காரம் செய்த 81 வயது கிழவன்.. எப்படி தெரியுமா? டிஜிட்டல் முறையில்..!

இதனை நம்பிய சிறுமியின் தாயும் அந்த சிறுமியை பூசாரி பழனியின் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது சிறுமியின் தாயாரை வீட்டின் வெளியே அமர வைத்த பூசாரி பழனி தனி அறைக்கு அழைத்து சென்று சிறுமியின் வயிற்று வலியை போக்க சிறப்பு பூஜைகள் செய்வதாக கூறியுள்ளார். ஆனால், சம்பவத்தன்று அந்த சிறுமியை பூசாரி பழனி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக சிறுமி சோர்வுடன் காணப்பட்டதை அடுத்து தயார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் சிறுமி 3 மாதம் கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளார். இதனை கேட்டு சிறுமியின் தயார்ட அதிர்ச்சியடைந்தார். இதுதொடர்பாக சிறுமியிடம் விசாரித்த போது  நடந்தவற்றை கூறியுள்ளார். இதனையடுத்து, சிறுமியின் தாயார் இதுகுறித்து கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கோயில் பூசாரி பழனியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க;- இந்த வயசுலேயும் இப்படி ஒரு காரியமா.? 11ம் வகுப்பு பள்ளி மாணவியை 8 மாதம் கர்ப்பமாக்கிய 60 வயது கிழவன்.!

PREV
click me!

Recommended Stories

Salem Crime: இரண்டு குழந்தைகளை பெற்றும் அடங்காத 23 வயது லலிதா.. அலறிய சேலம்.. நடந்தது என்ன?
Chennai Crime: ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! கணவனை துண்டு துண்டாக வெட்டி கொன்றது ஏன்? சிக்கிய மனைவி பகீர்