காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி ரத்த வெள்ளத்தில் துடிதுடிக்க கொலை.. சோளகாட்டில் பதுங்கிய சைக்கோ இளைஞர் கைது.!

Published : Jun 10, 2022, 09:05 AM ISTUpdated : Jun 10, 2022, 09:07 AM IST
காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி ரத்த வெள்ளத்தில் துடிதுடிக்க கொலை.. சோளகாட்டில் பதுங்கிய சைக்கோ இளைஞர் கைது.!

சுருக்கம்

கொலை செய்துவிட்டு தப்பிய சாமிதுரையை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், சோளகாட்டில் தலைமறைவாக இருந்த சாமிதுரையை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து, அந்த இளைஞரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

காதலிக்க மறுத்ததால் கல்லூரி மாணவியை தலையில் கல்லை போட்டு கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த இளைஞர் சாமிதுரை கைது செய்யப்பட்டுள்ளார். 

சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே உள்ள கூடமலை ஊராட்சி மேலவீதி பகுதியை சேர்ந்தவர் விவசாயி முருகேசன். இவரது மனைவி ஜெயலட்சுமி.  இவர்களுக்கு  நந்தினி, ரோஜா என்கிற 2 மகள்களும், விஜய் என்கிற ஒரு மகனும் உள்ளனர். முருகேசனின் 2வது மகள் ரோஜா ஆத்தூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. தமிழ் 2ம் ஆண்டு படித்து வருகிறார். 

இதையும் படிங்க;-  கொஞ்ச நேரம் அட்ஜஸ்ட் பண்ணல மார்க்ல கைவச்சிடுவேன்.. பள்ளி மாணவிகளை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்த HM..!

இதனிடையே ஆத்தூர் அருகே உள்ள தாண்டவராயபுரம் பகுதியை சேர்ந்த நீலக்கிருஷ்ணன் மகன் சாமிதுரை கூடமலையில் உள்ள தனது பெரியப்பா வீட்டிற்கு சென்றபோது கல்லூரி மாணவி ரோஜாவை பார்த்ததில் இருந்து காதலித்து வந்துள்ளார். ஆனால், இவரது காதலை அந்த பெண் ஏற்கவில்லை. இதனால், ஓயாமல் டார்ச்சர் செய்து வந்துள்ளார். இதனையடுத்து, சாமிதுரை ரோஜா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சென்றுள்ளார்.  அப்போது, தன்னை காதலித்து திருமணம் செய்து கொள் இல்லையென்றால் உன்னை கொன்று விடுவேன் என மிரட்டுள்ளார். 

அப்படி இருந்த போதிலும் அவரது காதலை ஏற்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த சாமிதுரை ரோஜாவை கீழே தள்ளி தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளார். இதனையடுத்து, கொலை செய்துவிட்டு தப்பிய சாமிதுரையை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், சோளகாட்டில் தலைமறைவாக இருந்த சாமிதுரையை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து, அந்த இளைஞரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க;- காதல் மனைவியை கொன்று துண்டு துண்டாக வெட்டி டிரம்மில் அடைத்த சைக்கோ கணவன்.. என்ன காரணம் தெரியுமா?

PREV
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!