ஆசைவார்த்தை கூறி ஆசை தீர உல்லாசம்.. வீடியோ எடுத்து நண்பர்களுக்கு விருந்தாக்க நினைத்த காமக்கொடூரன்.!

Published : Jun 09, 2021, 04:45 PM IST
ஆசைவார்த்தை கூறி ஆசை தீர உல்லாசம்.. வீடியோ எடுத்து நண்பர்களுக்கு விருந்தாக்க நினைத்த காமக்கொடூரன்.!

சுருக்கம்

சிறுமியிடம் தங்களுடன் உல்லாசமாக இருக்கும்படி வற்புறுத்தியுள்ளனர். அதற்கு சிறுமி மறுக்கவே உல்லாசமாக இருக்கும்போது எடுத்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என சந்திரகணேஷ் மிரட்டியுள்ளார். அவர்களின் பிடியில் இருந்து தப்பித்த சிறுமி வீட்டிற்கு வந்துவிட்டார். ஆனாலும், தொடர்ந்து சந்திரகணேஷ் மிரட்டி வந்ததாக தெரிகிறது.

ஆசைவார்த்தை கூறி உல்லாசமாக இருந்து வீடியோ  எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட போவதாக சிறுமிக்கு மிரட்டல் விடுத்த ஓட்டுநர் உள்பட 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

கிருஷ்ணகிரி நாகரசம்பட்டி அருகே உள்ள ஒரு பகுதியை சேர்ந்த தினக்கூலி வேலைக்கு செல்லும் தம்பதிக்கு 17 வயதுடைய மகள் உள்ளார். இவர் நெடுங்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். அதேபகுதியை சேர்ந்தவர் சந்திரகணேஷ் (32). இவர் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். அந்த மாணவி வீட்டில் தனியாக இருக்கும் போது அவருடன் பழகியுள்ளார். அப்போது, ஆசைவார்த்தை கூறி சிறுமியுடன் உல்லாசமாக இருந்துள்ளார். 

அதனை சிறுமிக்கு தெரியாமல் சந்திரகணேஷ் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்து கொண்டார். இந்நிலையில், கடந்த 26ம் தேதி சிறுமி தனது வீட்டின் பின்புறம் உள்ள பகுதிக்கு காலைக்கடன் கழிப்பதற்காக சென்றார். அப்போது, அங்கு தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த டீக்கடை வைத்துள்ள ஜூவா (20) டிரைவராக உள்ள ரமேஷ்(31) ஆகியோருடன் சந்திரகணேஷ் வந்தார். 

பின்னர், அவர்கள் சிறுமியிடம் தங்களுடன் உல்லாசமாக இருக்கும்படி வற்புறுத்தியுள்ளனர். அதற்கு சிறுமி மறுக்கவே உல்லாசமாக இருக்கும்போது எடுத்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என சந்திரகணேஷ் மிரட்டியுள்ளார். அவர்களின் பிடியில் இருந்து தப்பித்த சிறுமி வீட்டிற்கு வந்துவிட்டார். ஆனாலும், தொடர்ந்து சந்திரகணேஷ் மிரட்டி வந்ததாக தெரிகிறது.

இதுகுறித்து நேற்று பெற்றோரிடம் சிறுமி தெரிவித்தார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுமியுடன் பர்கூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர். இதனையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் சந்திரகணேஷ், ஜூவா, ரமேஷ் ஆகியோரை போச்சோ சட்டத்தில் கைது செய்தனர். தொடர்ந்து சந்திரகணேஷிடமிருந்த செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.  

PREV
click me!

Recommended Stories

முதலிரவில் அதிர்ச்சி.. திருமணமான 3 நாளில் விவாகரத்து கேட்ட புதுப்பெண்! நடந்தது என்ன?
ஆண்ட்டியின் அழகில் மயங்கிய கொரியர் ஊழியர்.. ரவுடியின் மனைவிக்கு விடாமல் காதல் மெசேஜ்.. இறுதியில் நடந்த அதிர்ச்சி