ஆசை வார்த்தை கூறி பள்ளி மாணவியை நைசாக அழைத்து சென்ற காதலன்.. 2 நாட்களாக நண்பர்களுடன் செய்த காரியம்..!

Published : Jun 08, 2021, 04:38 PM IST
ஆசை வார்த்தை கூறி பள்ளி மாணவியை நைசாக அழைத்து சென்ற காதலன்..  2 நாட்களாக நண்பர்களுடன் செய்த காரியம்..!

சுருக்கம்

நாகர்கோவில் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வவிகாரம் தொடர்பாக காதலன் உள்பட 3 வாலிபர்களை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

நாகர்கோவில் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வவிகாரம் தொடர்பாக காதலன் உள்பட 3 வாலிபர்களை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே அனந்தபாலம் பகுதியை சேர்ந்தவர் ஆல்டோ மைக்கிள் டோனிக் (21). இவருக்கும் வாணியக்குடி பகுதியை சேர்ந்த பிளஸ்-1 மாணவி ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.  இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே காதலாக மாறியது. இதையடுத்து ஆல்டோ மைக்கிள் டோனிக், மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். 

இதனிடையே,  மகளை எங்கு தேடியும் கிடைக்காததால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவரது தாயார், நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆல்டோ மைக்கிள் டோனிக் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். 

இந்த சம்பவம் தொடர்பாக ஆல்டோ மைக்கிள் டோனிக் கின் நண்பர்கள் 3 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர்களையும் போலீசார் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட 4 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி  சிறையில் அடைத்தனர். இதனையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவிக்கு மருத்துவ பரிசோதனை செய்ய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆசை வார்த்தை கூறி மாணவியை அழைத்து சென்று 4 பேர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

முதலிரவில் அதிர்ச்சி.. திருமணமான 3 நாளில் விவாகரத்து கேட்ட புதுப்பெண்! நடந்தது என்ன?
ஆண்ட்டியின் அழகில் மயங்கிய கொரியர் ஊழியர்.. ரவுடியின் மனைவிக்கு விடாமல் காதல் மெசேஜ்.. இறுதியில் நடந்த அதிர்ச்சி