கள்ளக்காதலனுடன் அடிக்கடி உல்லாசம்.. தட்டிக்கேட்ட கணவரை துடிதுடிக்க கொன்ற கொடூர மனைவி..!

Published : Jun 08, 2021, 03:16 PM IST
கள்ளக்காதலனுடன் அடிக்கடி உல்லாசம்.. தட்டிக்கேட்ட கணவரை  துடிதுடிக்க கொன்ற கொடூர மனைவி..!

சுருக்கம்

திருச்சியில் கணவரை கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியில் கணவரை கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி காந்தி மார்கெட் அருகே உள்ள தாராநல்லூர் பூக்கொல்லை பகுதியை சேர்ந்தவர் ஷேக் தாவூத் (34) என்ற மாற்றுத்திறனாளி. இவர் தில்லைநகரில் உள்ள தையல் கடையில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி ரகமத் பேகம் (31). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில், ரகமத் பேகத்திற்கும், அவரது உறவினர் அப்துல் அஜீஸ் என்பவருக்கும் கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. அடிக்கடி இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த விவகாரம் நாளடைவில் கணவருக்கு தெரியவந்தது. பின்னர், ஷேக் தாவூத் இருவரையும் கண்டித்து உள்ளார். இதனால் கோபம் அடைந்த ரகமத் பேகம் தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கொல்ல திட்டமிட்டார்.

இந்நிலையில், நேற்று பிற்பகல் ஷேக்தாவூத் வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது மனைவியும், கள்ளக்காதலனும் சேர்ந்து அவரின் முகத்தில் தலையணையால் அழுத்தி கொலை செய்தனர். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இது தொடர்பாக போலீசார் மனைவியிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில் கணவரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து, கள்ளக்காதலன் மற்றும்  ரகமத் பேகம் இருவரையும் கைது செய்துள்ளனர். கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவி கணவனை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

சகோதரியை கண்டித்த ஆசிரியர்..! பள்ளியில் துப்பாக்கிச் சூட்டில் 22 குழந்தைகள் பலி..! பணயக் கைதிகளான ஆசிரியர்கள்..!
'இந்தியாவை எதிர்க்கும் எவருக்கும் இதுதான் நடக்கும்..!' சிறையில் கதறக் கதற கொல்லப்பட்ட பயங்கரவாதி.. கொலையாளிக்கு பெருகும் ஆதரவு..!