என்னுடைய பொண்ண நாசம் பண்ணி.. கர்ப்பமாகிட்டான்..போலீஸ் ஸ்டேசனில் கதறிய தாய்..!

Published : Nov 22, 2022, 12:02 PM ISTUpdated : Nov 22, 2022, 12:03 PM IST
 என்னுடைய பொண்ண நாசம் பண்ணி.. கர்ப்பமாகிட்டான்..போலீஸ் ஸ்டேசனில் கதறிய தாய்..!

சுருக்கம்

சென்னையில் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி 11ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

சென்னையில் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி 11ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

அண்மைக்காலமாக பெண்கள், மாணவிகள், சிறுமிகள், உள்ளிட்டோருக்கு பாலியல் புகார்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இவர்களின் வசிப்பிடங்களில் நடப்பதை போல் இவர்கள் பணியாற்றும் இடங்களிலும், பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களே தன்னிடம் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. 

இதையும் படிங்க;- சரக்கடிக்க பணம் தர மாட்டேனு சொன்ன மனைவி.. தாலி கயிற்றால் கழுத்தை இறுக்கி கொன்னுட்டேன்! கணவர் பகீர் வாக்குமூலம்

இந்நிலையில், சென்னை வியாசர்பாடியை சேர்ந்த 33 வயது பெண் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். இவருக்கு 15 வயதில் மகள் அரசு பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்துள்ளார். அப்போது, புளியந்தோப்பு அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த விக்னேஷ் (19) என்பவர் அந்த மாணவியுடன் பழகி வந்துள்ளார். இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. அடிக்கடி இருவரும் வெளியில் சென்று வந்துள்ளனர். 

இந்த விவகாரம் அறிந்த பெற்றோர் இருவரையும் கண்டித்துள்ளனர். ஆனால், இதனை பெரிதாக அவர்கள் எடுத்துக்கொள்ளாமல் ஆசைவார்த்தை கூறி பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார். இந்நிலையில், அந்த சிறுமிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் தாய் புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள இளைஞரை தேடி வருகின்றனர். 

இதையும் படிங்க;-  உல்லாசமாக இருக்க வீட்டுக்கு வந்த போது கள்ளக்காதலி வேறு ஒருவருடன் நெருக்கம்.. இறுதியில் நடந்த அதிர்ச்சி..!

PREV
click me!

Recommended Stories

நான் உனக்கு போதாதா! என் பொண்ணு கேக்குதா.. ஆத்திரத்தில் 46 வயது ஆன்டி.. அலறிய சூர்ய பிரதாப் சிங்
சார்.. நான் உங்க ஸ்டூடண்ட்ஸ்.! இப்படியெல்லாம் பண்ணாதீங்க! எவ்வளவு சொல்லியும் கேட்காத ஆசிரியருக்கு செருப்பு மாலை