சரக்கடிக்க பணம் தர மாட்டேனு சொன்ன மனைவி.. தாலி கயிற்றால் கழுத்தை இறுக்கி கொன்னுட்டேன்! கணவர் பகீர் வாக்குமூலம்

By vinoth kumar  |  First Published Nov 21, 2022, 12:28 PM IST

சென்னை அம்பத்தூர் கள்ளிக்குப்பம் கங்கை நகரை சேர்ந்தவர் பவித்ரா (28). இவர் செங்குன்றத்தை சேர்ந்த ரெஜிஸ் (35) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தனர். பின்னர், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து பவித்ரா பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். 


சென்னையில் தாலி கயிற்றால் மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த 2வது கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் போலீசில் பல்வேறு அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். 

சென்னை அம்பத்தூர் கள்ளிக்குப்பம் கங்கை நகரை சேர்ந்தவர் பவித்ரா (28). இவர் செங்குன்றத்தை சேர்ந்த ரெஜிஸ் (35) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தனர். பின்னர், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து பவித்ரா பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், பவித்ரா பெற்றோர் வீட்டில் வசித்து வந்த போது அதே பகுதியை சேர்ந்த திருமணமாகி விவகாரத்தான  ராஜா (33) என்பவருடன் பழக்கம்  ஏற்பட்டுள்ளது. 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- 13 வயது சிறுமியை 2 ஆண்டுகளாக சீரழித்த 62 வயது கோயில் பூசாரி.. சரியான ஆப்பு வைத்த போக்சோ சிறப்பு நீதிமன்றம்.!

இதனையடுத்து, இருவரும் திருமணம் செய்து கொண்டு தனியாக வீடு எடுத்து வாழ்ந்து வந்தனர். கடந்த சில நாட்களே தம்பதிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், கடந்த 17ம் தேதி நள்ளிரவு மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதை அடுத்து பவித்ராவை சரமாரியாக  தாக்கியுள்ளார். வலி தாங்க முடியாமல் அவர் அலறி கூச்சலிட்டதால் தாலி கயிற்றால் கழுத்தை நெரித்து பவித்ராவை கொலை செய்துவிட்டு கணவர் அங்கிருந்து தப்பினார். 

இதையும் படிங்க;-நள்ளிரவில் பெண் கூச்சலிட்டு அலறல் சத்தம்! அடுத்த சில நிமிடங்களில் கப்சிப்!இறுதியில் தம்பதிக்குள் நடந்தது என்ன?

 

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள கணவரை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், அம்பத்தூர் ரயில் நிலையம் அருகில் சுற்றித்திரிந்த ராஜாவை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். அப்போது, போலீசில் அவர் அளித்த வாக்குமூலத்தில்;- குடிக்க பணம் தராததால் பவித்ராவுக்கும், எனக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்து தாலிக்கயிற்றால் பவித்ராவை கொலை செய்துவிட்டேன் என கூறியுள்ளார். பின்னர் கைது செய்யப்பட்ட ராஜாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க;- உல்லாசமாக இருக்க வீட்டுக்கு வந்த போது கள்ளக்காதலி வேறு ஒருவருடன் நெருக்கம்.. இறுதியில் நடந்த அதிர்ச்சி..!

click me!