கோவையில் கார் குண்டு விபத்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஆட்டோவில் மர்ம பொருள் வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆட்டோ வெடித்து விபத்து
கோவை மாவட்டம் உக்கடத்தில் கடந்த மாதம் 23 ஆம் தேதி காரில் இருந்த மர்ம பொருள் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் காரில் இருந்து குண்டு, பாஸ்ராஸ், ஆணி போன்றவை கைப்பற்றப்பட்டது. இதன் காரணமாக இந்த சம்பவம் திட்டமிட்ட சதி என தெரியவந்தது. இதனையடுத்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய 6 பேரை கைது செய்த போலீசார் உபா சட்டத்தில் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தொடர்பாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் என்ஐஏ போலீசார் தீவிர விசாரணை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்பட்டது.
இரண்டு பேர் காயம்
இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது கர்நாடாக மாநிலம் மங்களூரில் இதே போன்று ஆட்டோ ஒன்று வெடித்த சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் மங்களூரில் ஆட்டோவில் மர்ம பொருள் வெடித்து விபத்துக்குள்ளானதில் ஆட்டோவில் தீப்பிடித்தது. இதனை பார்த்த அந்தப்பகுதியில் இருந்தவர்கள் விரைந்து வந்து ஆட்டோவில் பிடித்து எரிந்த தீயை அணைத்தனர். இந்த விபத்தில் ஆட்டோ டிரைவரும், ஒரு பயணியும் பலத்த காயம் அடைந்தனர்.
ஆட்டோவில் இருந்த மர்ம பொருள் என்ன.?
இதனையடுத்து அந்த இரண்டு பேரை மீட்ட அப்பகுதியில் உள்ளவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். விபத்து நடைபெற்ற இடத்தில் தடயவியல் நிபுணர்கள், ஆய்வு செய்தனர். அப்போது ஆட்டோவில் இருந்து குக்கர் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனால் குக்கரில் இருந்த மர்ம பொருள் வெடித்து இருக்குமோ என என சந்தேகம் எழுந்துள்ளது. இந்தநிலையில் மங்களூரில் ஏற்பட்ட ஆட்டோ வெடித்ததை தொடர்ந்து சென்னையில் இரவு நேரத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
இதையும் படியுங்கள்
ஒரே மாதத்தில் அமித் ஷா மீது இபிஎஸ்கு கோபம் ஏன்.? ஓபிஎஸ் ஆதரவாளர் கூறிய பரபரப்பு தகவல்