நள்ளிரவில் பெண் கூச்சலிட்டு அலறல் சத்தம்! அடுத்த சில நிமிடங்களில் கப்சிப்!இறுதியில் தம்பதிக்குள் நடந்தது என்ன?

Published : Nov 19, 2022, 11:02 AM ISTUpdated : Nov 19, 2022, 11:07 AM IST
நள்ளிரவில் பெண் கூச்சலிட்டு அலறல் சத்தம்! அடுத்த சில நிமிடங்களில் கப்சிப்!இறுதியில் தம்பதிக்குள் நடந்தது என்ன?

சுருக்கம்

சென்னை அம்பத்தூர் கள்ளிக்குப்பம் கங்கை நகரை சேர்ந்தவர் பவித்ரா (28). இவர் செங்குன்றத்தை சேர்ந்த ரெஜிஸ் (35) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தனர். 

சென்னையில் தாலி கயிற்றால் கழுத்தை நெரித்து மனைவியை கொலை செய்துவிட்டு தலைமறைவாக உள்ள கணவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

சென்னை அம்பத்தூர் கள்ளிக்குப்பம் கங்கை நகரை சேர்ந்தவர் பவித்ரா (28). இவர் செங்குன்றத்தை சேர்ந்த ரெஜிஸ் (35) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தனர். பின்னர், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து பவித்ரா பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், பவித்ரா பெற்றோர் வீட்டில் வசித்து வந்த போது அதே பகுதியை சேர்ந்த திருமணமாகி விவகாரத்தான  ராஜா (33) என்பவருடன் பழக்கம்  ஏற்பட்டுள்ளது. 

இதையும் படிங்க;- உல்லாசமாக இருக்க வீட்டுக்கு வந்த போது கள்ளக்காதலி வேறு ஒருவருடன் நெருக்கம்.. இறுதியில் நடந்த அதிர்ச்சி..!

இதனையடுத்து, இருவரும் திருமணம் செய்து கொண்டு தனியாக வீடு எடுத்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், கடந்த சில நாட்களே தம்பதிக்கு இடையே தகராறு இருந்து வந்துள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த ராஜா நள்ளிரவிலேயே பவித்ராவை சரமாரியாக  தாக்கியுள்ளார். வலி தாங்க முடியாமல் அவர் அலறி கூச்சலிட்டதால் தாலி கயிற்றால் கழுத்தை நெரித்து பவித்ராவை கொலை செய்துள்ளார். பின்னர்,  கணவர் ராஜா அங்கிருந்து தப்பினார். 

இதுதொடர்பாக அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்து பார்த்த போது பவித்ரா கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார். இதனையடுத்து, அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக  கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள கணவரை தேடி வருகின்றனர். 

இதையும் படிங்க;-  எனக்கு நீங்க அப்பா மாதிரி.. ப்ளீஸ் விட்ருங்க! கெஞ்சியும் விடாமல் இளம்பெண்ணை கதறவிட்ட தாயின் கள்ளக்காதலன்.!

PREV
click me!

Recommended Stories

இரவு பகல் பாராமல் எந்நேரமும் ஓயாமல் டார்ச்சர்! அதிமுக பிரமுகரின் மகளை இதற்காக தான் கொன்றேன்!
இரண்டு குழந்தைகளின் தாய் செய்ற வேலையா இது.. பழைய காதலனுக்காக புருஷனை போட்டு தள்ளிய மனைவி