மங்களூர் குக்கர் குண்டுவெடிப்பு..! சதி திட்டத்தின் பின்னனி என்ன..? ஷாரீக்கிடம் என்ஐஏ போலீசார் விசாரணை..?

By Ajmal Khan  |  First Published Nov 21, 2022, 12:30 PM IST

மங்களூர் குக்கர் குண்டு வெடிப்பில் தொடர்புடைய ஷாரீக் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவரிடம் குண்டு வெடிப்பு தொடர்பாக என்ஐஏ போலீசார் இன்று விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.


கோவை கார் குண்டு வெடிப்பு

கோவையில் கடந்த மாதம் 23 ஆம் தேதி  கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் ஜமேஷா முபின் பலியானார். இதை அடுத்து போலீசார் நடத்திய சோதனையில்  75 கிலோ வெடி மருந்துகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக அப்சல் கான், அசாருதீன் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். தற்போது இந்த வழக்கை என்.ஐ.ஏ விசாரித்து வருகின்றது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மங்களூரில் ஆட்டோ ஒன்றில் குக்கர் குண்டு வெடித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்த சம்பவத்தில் முகமது ஷாரிக்  என்பவர் படுகாயம் அடைந்தார்.  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஷாரீக் குக்கர் குண்டு வெடிப்புக்கு மூல காரணமாக இருக்க கூடும் எனவும் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்தவர் என்பதும் விசாரணையில் தெரிவந்துள்ளதாக கூறப்படுகிறது.

Tap to resize

Latest Videos

மங்களூரில் ஆட்டோ வெடித்தது விபத்து அல்ல..! தீவிரவாத தாக்குதல்..! அதிர்ச்சி தகவலை வெளியிட்ட கர்நாடக டிஜிபி

 

மங்களூர் ஆட்டோ குண்டு வெடிப்பு

இந்நிலையில் குக்கர் வெடிப்பு ஆசாமி  முகமது ஷாரிக் கடந்த செப்டம்பர் மாதம் கோவை காந்திபுரம் பகுதியில் லாட்ஜில்  தங்கியிருந்த பொழுது நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த ஒரு தனியார் பள்ளி ஆசிரியர் சுரேந்தருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவருடன் நெருக்கத்தை ஏற்படுத்திய முகமது ஷாரிக் அவரது அறையில் தங்கி இருந்துள்ளார். அப்பொழுது சுரேந்திரனின் ஆதார் கார்டை பயன்படுத்தி சிம்கார்டு வாங்கியுள்ளார். இதை அறிந்த தனிப்படை போலீசார் சுரேந்திரனை கோவை அழைத்து வந்து தனி இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே ஷாரித்  கோவையில் 3 நாட்கள் ,மதுரையில் 2 நாட்கள், கன்னியாகுமரியில் 1 நாள், கேரள மாநிலத்தில் 2 நாட்களும் தங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. காந்திபுரம் பகுதியில் தங்கி இருந்த பொழுது யாரையெல்லாம் சந்தித்தார் என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

கோவைக்கு வந்தது ஏன்.?

இதற்கிடையே சுரேந்தரிடம் விசாரணை நடத்த மங்களூரைச் சேர்ந்த போலீஸ் தனிப்படையும் கோவை வந்துள்ளது. சுரேந்திரனுக்கும் முகமது ஷாரிக்கும் உள்ள தொடர்பு என்ன என்பது குறித்து தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். கோவை கார் குண்டு வெடிப்பு மற்றும் மங்களூர் ஆட்டோ குண்டு வெடிப்பு ஆகிய  இரண்டு சம்பவமும் ஒத்துப் போவதால் இரு மாநில போலீசாரும் கூட்டு சேர்ந்து விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.  கோவை கார் குண்டு வெடிப்பில் பலியான ஜமேஷா முபினை, முகமது ஷாரிக் சந்தித்து சதித் திட்டம் தீட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.கோவையில் முதலில் கார் வெடிப்பு சம்பவத்தை விசாரித்த தனிப்படை போலீசாரும் மங்களூர் விரைந்துள்ளனர்.

என்ஐஏ போலீசார் விசாரணை

மங்களூர் குக்கர் குண்டு வெடிப்பில் தொடர்புடைய ஷாரீக் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவரிடம் குண்டு வெடிப்பு தொடர்பாக என்ஐஏ போலீசார் இன்று விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்காக கோவை வழக்கை விசாரித்து வரும் என்ஐஏ போலீசாரும் மங்களூர் விரைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்கள்

மங்களூர் ஆட்டோ வெடிப்பு சம்பவம்... உதகையை சேர்ந்தவருக்கு தொடர்பா? போலீஸார் அதிரடி!!

click me!