பீச் ரிசார்ட்டுக்கு கூட்டிட்டு போய் சிறுமியை காதலனுக்கு விருந்தாக்கிய காதலி!மிரட்டி பணம் பறித்த ஜோடிக்கு ஆப்பு

Published : Jul 20, 2022, 01:31 PM ISTUpdated : Jul 20, 2022, 01:32 PM IST
பீச் ரிசார்ட்டுக்கு கூட்டிட்டு போய் சிறுமியை காதலனுக்கு விருந்தாக்கிய காதலி!மிரட்டி பணம் பறித்த ஜோடிக்கு ஆப்பு

சுருக்கம்

சென்னை தி.நகர் பகுதியில் 29 வயது ஆசிரியை ஒருவர், தன்னிடம் டியூஷன் படித்து வந்த 7ம் வகுப்பு சிறுமியை தனது காதலருடன் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள விடுதிக்கு காரில் அழைத்து சென்றுள்ளார். 

சென்னை தி.நகரில் 7ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் டியூசன் ஆசிரியை மற்றும் அவரது காதலருக்கு  ஆயுள் தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. 

சென்னை தி.நகர் பகுதியில் 29 வயது ஆசிரியை ஒருவர், தன்னிடம் டியூஷன் படித்து வந்த 7ம் வகுப்பு சிறுமியை தனது காதலருடன் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள விடுதிக்கு காரில் அழைத்து சென்றுள்ளார். அங்கு அந்த சிறுமியை ஆசிரியையின் காதலர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, சிறுமியை மிரட்டி ஆசிரியை தங்க நகை மற்றும் பணம் பெற்று வந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பாக தி.நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, டியூசன் ஆசிரியை  மற்றும் அவரது காதலனை போலீசார் கைது செய்தனர்.

இதையும் படிங்க;- 31 வயது ஆன்ட்டி குளிப்பதை அங்குலம் அங்குலமாக வீடியோ எடுத்த 21 வயது இளைஞர்.. அப்புறம் என்ன நடந்தது தெரியுமா?

இதுதொடர்பான வழக்கு சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம். ராஜலெட்சுமி முன் நடைபெற்று வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்ற நிலையில் தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதில், குற்றச்சாட்டுகள் நிரூபணமாவதாக கூறி, இளம்பெண் மற்றும் அவரது காதலனுக்கு ஆயுள் தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு வழங்கினார். 

மேலும் டியூஷன் ஆசிரியைக்கு 70 ஆயிரம் ரூபாயும், காதலருக்கு 60 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையும் படிங்க;-  உல்லாசத்துக்கு வர மறுத்த கள்ளக்காதலி.. தலைக்கேறிய காமத்தால் கள்ளக்காதலன் செய்த செயலை நீங்களே பாருங்க.!

PREV
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான பெண் தாதா அஞ்சலைக்கு 2 ஆண்டு சிறை! எந்த வழக்கில் தெரியுமா?
காதலியை ஆசைவார்த்தை கூறி காட்டுக்கு அழைத்து சென்ற காதலன்! அலறிய சித்ரப் பிரியா! அடுத்து நடந்த அதிர்ச்சி!