எனக்கும் உனக்கும் செட்டாகாது! காதலை ஏற்க மறுத்த கல்லூரி மாணவி கீர்த்தனா! சரமாரியாக குத்திக்கொன்ற பிரபல ரவுடி.!

Published : Jul 20, 2022, 12:38 PM ISTUpdated : Jul 20, 2022, 12:51 PM IST
எனக்கும் உனக்கும் செட்டாகாது! காதலை ஏற்க மறுத்த கல்லூரி மாணவி கீர்த்தனா! சரமாரியாக குத்திக்கொன்ற பிரபல ரவுடி.!

சுருக்கம்

 கீர்த்தனா கல்லூரிக்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது கீர்த்தனாவை பின் தொடர்ந்து வந்த முகேஷ், தன்னை காதலிக்குமாறு தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார். இதனை ஏற்க முடியாது என  கீர்த்தனா திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். 

காதலை ஏற்க மறுத்த கல்லூரி மாணவியை பிரபல ரவுடி சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்தத சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

புதுச்சேரியை அடுத்த திருபுவனை அருகே சன்னியாசி குப்பம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜன். இவரது மகள் கீர்த்தனா (18). இவர் அரசு கலைக்கல்லூரியில் பி.காம். படித்து வந்தார். இவரை அதே பகுதியை சேர்ந்த உறவினர் முகேஷ் (23) என்பவர் ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. தனது காதலை மாணவியிடம் பலமுறை கூறியும், அதனை அவர் ஏற்க மறுத்துவிட்டார். 

இதையும் படிங்க;- மகன் பிறந்தநாள் அதுவுமா பார்க்க விடாத தாய்.. காதல் மனைவியை ஓட ஓட விரட்டி கண்டம் துண்டமாக வெட்டி வீசிய கணவர்

இந்நிலையில், வழக்கம்போல கீர்த்தனா கல்லூரிக்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது கீர்த்தனாவை பின் தொடர்ந்து வந்த முகேஷ், தன்னை காதலிக்குமாறு தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார். இதனை ஏற்க முடியாது என  கீர்த்தனா திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த முகேஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாணவியை கழுத்து, மார்பு உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். 

ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த கீர்த்தனாவை அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவியை பரிசோதனை செய்தத மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். மாணவி கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கீர்த்தனா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதையும் படிங்க;- ஒரே நேரத்தில் 3 போலீஸ்காரர்களுடன் உல்லாசமாக இருந்த மனைவி.. நேரில் பார்த்து அதிர்ந்து போன கணவர்.!

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள முகேஷை வலைவீசி தேடி வருகின்றனர். முகேஷ் மீது ஏற்கனவே அடிதடி, மதுபான கடை மீது நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி கொடூரமாக குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க;-  ஆசையாக நெருங்கும் போதெல்லாம் ஃபுல் மப்பில் தூங்கிய கணவர்.. ஏக்கத்தில் இருந்த மனைவி செய்த பகீர் சம்பவம்..!

PREV
click me!

Recommended Stories

காதலியை ஆசைவார்த்தை கூறி காட்டுக்கு அழைத்து சென்ற காதலன்! அலறிய சித்ரப் பிரியா! அடுத்து நடந்த அதிர்ச்சி!
சினிமா மிஞ்சும் திகில்.. காட்டிக்கொடுத்த காலி மதுபாட்டில்கள் பார் கோடுகள்.. பெண் கொலை வழக்கில் ஓய்வு பெற்ற காவலர் கைது