பாழடைந்த வீட்டிற்குள் வைத்து பள்ளி மாணவி பலமுறை பலாத்காரம்.. குழந்தை பெற்ற சம்பவத்தால் அதிர்ச்சி..!

Published : Aug 05, 2021, 05:08 PM IST
பாழடைந்த வீட்டிற்குள் வைத்து பள்ளி மாணவி பலமுறை பலாத்காரம்.. குழந்தை பெற்ற சம்பவத்தால் அதிர்ச்சி..!

சுருக்கம்

அந்த மாணவன் மாணவியை தொடர்பு நான் உன் வீட்டிற்கு வெளியில் தான் நிற்கிறேன். வெளியில் வா உன்னை பார்க்க வேண்டும் என அழைத்தார். மாணவியும் வெளியில் வந்தார். பின்னர் மாணவியை அழைத்து கொண்டு அருகே உள்ள பாழடைந்த வீட்டிற்கு சென்றார். அங்கு வைத்து 2 பேரும் தனிமையில் பேசி கொண்டிருந்தனர். 

ஆசைவார்த்தை கூறி பள்ளி மாணவியை பலமுறை பலாத்காரம் செய்து குழந்தை பெற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது அந்த மாணவனை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

கோவை மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த 2019-ம் ஆண்டு 10-ம் வகுப்பு படித்த போது அந்த பகுதியில் உள்ள டியூசனுக்கு படிக்க சென்றார். அப்போது அந்த டியூசனில் படித்த மாணவர் ஒருவருடன் மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. 

பின்னர் 2 பேரும் தங்களது செல்போன் எண்களை பரிமாறி கொண்டு அடிக்கடி செல்போனில் பேசி தங்களது காதலை வளர்த்து வந்தனர். வீட்டுக்கு தெரியாமல் அடிக்கடி வெளியிலும் சென்று வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் 10-ம் தேதி மாணவியை போனில் தொடர்பு கொண்ட மாணவர் நான் உன்னை பார்க்காமல் இருக்க முடியவில்லை. உடனே உன்னை பார்க்க வேண்டும் என்றார். மாணவி அதற்கு மறுப்பு தெரிவித்தாக கூறப்படுகிறது. 

இதனையடுத்து, அந்த மாணவன் மாணவியை தொடர்பு நான் உன் வீட்டிற்கு வெளியில் தான் நிற்கிறேன். வெளியில் வா உன்னை பார்க்க வேண்டும் என அழைத்தார். மாணவியும் வெளியில் வந்தார். பின்னர் மாணவியை அழைத்து கொண்டு அருகே உள்ள பாழடைந்த வீட்டிற்கு சென்றார். அங்கு வைத்து 2 பேரும் தனிமையில் பேசி கொண்டிருந்தனர். அப்போது மாணவர், மாணவியிடம் தான் உன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுபோன்று பலமுறை மாணவியை அதே இடத்திற்கு அழைத்து சென்று ஆசை வார்த்தை கூறி வலுகட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தார்.

எப்படியும் தனது காதலன் தன்னை திருமணம் செய்து கொள்வார் என்ற நம்பிக்கையில் தனக்கு நடந்த சம்பவத்தை மாணவி பெற்றோரிடம் தெரிவிக்காமலேயே இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று காலை வீட்டில் இருந்த மாணவி திடீரென வாந்தி எடுத்ததுடன், மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சியான பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு மாணவியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாகவும், சற்று நேரத்தில் குழந்தை பிறந்து விடும் என கூறி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். மருத்துவமனையில் அனுமதித்த சிறிது நேரத்தில் மாணவிக்கு பெண் குழந்தை பிறந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். 

PREV
click me!

Recommended Stories

28 வயது ஜிம் மாஸ்டர்.! 42 வயது யோகிதா! எந்நேரமும் ஓயாமல்! இறுதியில் நடந்த அதிர்ச்சி.. வெளியான பரபரப்பு தகவல்!
Sathankulam Case: இந்தியாவையே உலுக்கிய தீர்ப்பு! 9 போலீசாருக்கு மரண தண்டனை.. நடந்தது என்ன?