12 வயது சிறுமியை கழிவறையில் அடைத்து வைத்து டிரைவர் செய்த அட்டூழியம்.. கதறிய பெற்றோர்.. காப்பாற்றிய போலீஸ்.

Published : Aug 05, 2021, 12:58 PM ISTUpdated : Aug 05, 2021, 12:59 PM IST
12 வயது சிறுமியை கழிவறையில் அடைத்து வைத்து டிரைவர் செய்த அட்டூழியம்.. கதறிய பெற்றோர்.. காப்பாற்றிய போலீஸ்.

சுருக்கம்

இதனையடுத்து, போலீசார் அவரது வீட்டுக்குள் சென்று சல்லடை போட்டு தேடினர். அப்போது, சிறுமி பாத்ரூமில் அடைத்து பூட்டி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. பின்னர், போலீசார் அவளை மீட்டு தீவிர விசாரணை நடத்தினர். 

சென்னை அருகே 12 வயது சிறுமியை கடத்தி வீட்டில் அடைத்துவைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞரை ஆவடி அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ்  கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருமுல்லைவாயிலில் வீட்டில் இருந்தபடியே தனியார் எக்ஸ்போர்ட் கம்பெனியில் பெண் ஒருவர் பணியாற்றி வருகிறார். இவருக்கு 12 வயதில் மகள் உள்ளார். தான் தைத்த துணிகளை அருகே உள்ள எக்ஸ்போர்டில் கொடுத்து வர சொல்லியுள்ளார். இதையடுத்து துணி எடுத்து சென்ற மகள் நீண்ட நேரமாகியும் வீடுவரததால் எக்ஸ்போர்டுக்கு சென்று கேட்டுள்ளார். அப்போது தங்கள் மகள் வீடு திரும்பி நீண்ட நேரமாவதாக அவர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண் திருமுல்லைவாயில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

இதனை அடுத்து, திருமுல்லைவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர், போலீசார், அப்பகுதியில் உள்ள ஒரு கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது, அதே பகுதி திருவள்ளுவர் தெருவில் வசிக்கும் தனியார் நிறுவன டிரைவர் குமரேசன் (29) என்பவரது வீட்டுக்குள் சிறுமி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் அவரது வீட்டுக்குள் சென்று சல்லடை போட்டு தேடினர். அப்போது, சிறுமி பாத்ரூமில் அடைத்து பூட்டி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. பின்னர், போலீசார் அவளை மீட்டு தீவிர விசாரணை நடத்தினர். அதில், தெருவில் சென்ற சிறுமியை குமரேசன் வீட்டுக்குள் அழைத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு உள்ளளார். அப்போது, அவள் சத்தம் போட்டு அலறி உள்ளாள். 

இதனையடுத்து, அக்கம் பக்கத்தினருக்கு தெரிந்துவிடும் என பயந்து, சிறுமியை குமரேசன் வீட்டு பாத்ரூமில் தள்ளி வெளிப்புறமாக கதவை பூட்டி உள்ளார் என்பது தெரியவந்தது. இதன் பிறகு, போலீசார் குமரேசனை தேடிய போது, வீட்டிலிருந்து தலைமறைவாய் இருப்பது தெரியவந்தது. இது குறித்து, சிறுமியின் தாய் ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன் அடிப்படையில். இன்ஸ்பெக்டர் லதா தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், போலீசார் தலைமறைவாக இருந்த குமரேசனை கைது செய்து சிறையில் அடைத்தனர். 
 

PREV
click me!

Recommended Stories

கதறிய 9ம் வகுப்பு பள்ளி மாணவன்.. ஓயாமல் 4 பேர் டார்ச்சர்.. கட்டாய ஓரின**சேர்க்கையால் அதிர்ச்சி!
பல்கலைக்கழகத்தில் சரமாரி துப்பாக்கிச்சூடு.. 2 மாணவர்கள் பலி.. 8 பேர் படுகாயம்.. பரபரப்பு!