தன்னை அம்பானியாய் காட்டி ஏமாற்றிய கொத்தனார்... லாட்ஜில் வைத்து +2 மாணவியை சீரழித்து கொடூரம்..!

Published : Apr 13, 2019, 12:41 PM ISTUpdated : Apr 13, 2019, 12:50 PM IST
தன்னை அம்பானியாய்  காட்டி ஏமாற்றிய கொத்தனார்... லாட்ஜில் வைத்து  +2 மாணவியை சீரழித்து கொடூரம்..!

சுருக்கம்

கன்னியாகுமரியில் பணக்காரன் போல் விதவிதமான கெட்டப்புகளில் வந்து பாவனை செய்து பள்ளி மாணவியை காதல் வலையில் வீழ செய்து லாட்ஜில் வைத்து சீரழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து அந்த நபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.

கன்னியாகுமரியில் பணக்காரன் போல் விதவிதமான கெட்டப்புகளில் வந்து பாவனை செய்து பள்ளி மாணவியை காதல் வலையில் வீழ செய்து லாட்ஜில் வைத்து சீரழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து அந்த நபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை சேர்ந்த 12-ம் வகுப்பு படிக்கும் மாணவி கடந்த 19-ம் தேதி பள்ளியிலிருந்து வீடு திரும்பாததால், பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் மாணவியை தேடிய போலீசார், அவரின் செல்போன் சிக்னல்களை ஆராய்ந்ததில் மாணவி கேரள மாநிலம் கோனி பகுதியில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கேரளா விரைந்த போலீசார் மாணவியை  மீட்டதோடு, அவரை அழைத்து சென்ற ஜோஸ்பிளின் ராஜகுமார் என்பவரையும் கைது செய்தனர். 

அவரிடம் நடத்திய விசாரணையில், கடந்த ஓராண்டாக மாணவி படிக்கும் பள்ளி முன்பு சென்று விதவிதமான ஆடைகளை அணிந்து அவருக்கு காதல் வலை வீசியதோடு, தன்னை ஒரு பணக்காரன் போலவும் காண்பித்துக் கொண்டுள்ளார். அவருக்கு பரிசுப் பொருட்களைக் கொடுத்து காதல் வலையில் வீழ்த்தியதை ஜோஸ்பிளின் ஒப்புக்கொண்டார். மேலும் தனக்கு கேரளாவில் சொந்த வீடு இருப்பதாகவும் திருமணம் செய்துகொண்டு அங்கு சென்று சொகுசாக வாழலாம் என்றும் மாணவியிடம் கூறி ஜோஸ்பிளின் ராஜ்குமார் அழைத்துள்ளான். 

இதை நம்பி வீட்டிலிருந்த நகைகளுடன் வெளியேறிய மாணவி ராஜ்குமாருடன் சென்றுள்ளார். இதை தொடர்ந்து மாணவியை திருமணம் செய்து கொண்ட அவர், கேரளா பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார். அந்த பெண்ணை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளான். அங்கு சென்ற சில நாட்களிலேயே அவன் பணக்காரன் அல்ல, கட்டிடத் தொழிலாளி என்பது மாணவிக்கு தெரியவந்துள்ளது. 

மாணவியிடம் இருந்த நகைகள் அனைத்தையும் பிடுங்கி விற்று ஜாலியாக செலவு செய்து வந்துள்ளான். ஜோஸ்பிளின் ராஜ்குமார் இதேபோல் பணக்காரன் வேடமணிந்து மேலும் பல சிறுமிகளை ஏமாற்றி உள்ளார என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இதனையடுத்து அவரை  போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். 

PREV
click me!

Recommended Stories

Salem Crime: இரண்டு குழந்தைகளை பெற்றும் அடங்காத 23 வயது லலிதா.. அலறிய சேலம்.. நடந்தது என்ன?
Chennai Crime: ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! கணவனை துண்டு துண்டாக வெட்டி கொன்றது ஏன்? சிக்கிய மனைவி பகீர்